விருதுநகர் சுந்தரி யார் தெரியுமா? சிவகாசியில் வரிசையாக வந்த ஆண் நண்பர்கள்! கடைசிவரை நம்பினாரே சுரேஷ்
விருதுநகர்: விருதுநகர் காதலியை கண்டு, அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. சுரேஷ் என்ற பிரபல ரவுடியின் காதலிதான் சுந்தரி.. இந்த சுந்தரி போட்ட மாஸ்டர் பிளானைதான், சிவகாசி போலீசார் இப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.. இறுதியில், ஒட்டுமொத்த கும்பலையே தூக்கி உள்ளே வைத்திருக்கிறது போலீஸ்.. சுரேஷ் இப்போது என்ன ஆனார்? இதன் பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல் ஆலாவூரணி.. இங்கு வசித்து வருபவர் சுரேஷ். 27 வயதான சுரேஷ் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கிரிமினல் வழக்குகள்
இதனிடையே சுந்தரி என்ற பெண்ணுடன் சுரேஷ் பழகி வந்துள்ளார்.. சுந்தரி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. சுரேஷுடன் உறவு வந்தபிறகு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.. சுந்தரி வீட்டில்தான் சுரேஷ் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி சுந்தரி வீட்டில் தங்கியிருந்த சுரேஷை, 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டது. இதுகுறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தியபோதுதான், சுரேஷ் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, கடந்த மார்ச் மாதம் குணசேகரன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, சமீபத்தில்தான் சுரேஷ் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
சுரேஷின் ரகசிய காதலி
குணசேகரனை கொன்றதற்கு பழிக்குப்பழியாகவே அவரது தம்பி மதனகோபால் சுரேஷை கொலை செய்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.. இதற்காகவே, சுரேஷ் ஜாமீனில் வெளிவரும்வரை காத்திருந்தார்களாம். இறுதியில், மதனகோபால், அவரது நண்பர்கள் தனசேகரன், சூர்யபிரகாஷ், தருண், முத்துப்பாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், அடுத்த அதிர்ச்சி அம்பலமானது.. அதாவது, சுரேஷின் ரகசிய காதலி சுந்தரியும், சுந்தரியின் ஆண் நண்பர் வேலுச்சாமியும், சுரேஷை கொலை செய்வதற்கு, உதவினார்களாம்.. இதை கைதான கும்பலே வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, சுந்தரி, வேலுச்சாமி கைது செய்யப்பட்டார்கள்..
மாஸ்டர் பிளான் சுந்தரி
பிறகு சுந்தரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், அடுத்த அதிர்ச்சி போலீசாருக்கு காத்திருந்தது.. அதாவது, சுந்தரிக்கு ரவுடி சுரேஷ் மட்டுமின்றி, கைதான வேலுச்சாமி, தருண் உள்ளிட்டோருடனும் தொடர்பு இருந்துள்ளது. இந்த கள்ள உறவு தெரிந்து சுரேஷ் சுந்தரியை கண்டித்திருக்கிறார்.. இதனால், உறவுக்கு தடையாக உள்ள சுரேஷை போட்டுத்தள்ள மாஸ்டர் பிளான் போட்டுத் தந்ததே சுந்தரிதானாம்..
அதன்படி, மதனகோபால் கும்பலுடன், வேலுச்சாமியை நெருங்கி பழகவிட்டுள்ளார் .. தன்னுடைய வீட்டிற்கு சுரேஷ் வருவது பற்றி தகவல் தந்து, அதற்கான நாளையும் குறித்து தந்துள்ளார் சுந்தரி.
இன்ஸ்டாகிராம் மூலம் பறந்த மெசேஜ்
எதிர்பார்த்தது போலவே, சம்பவத்தன்று சுரேஷ், மதுபோதையில் சுந்தரியின் வீட்டிற்கு வந்துள்ளார். உடனே இன்ஸ்டாகிராம் மூலம் தருண், வேலுச்சாமிக்கு சுந்தரி மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.. இதையடுத்துதான், மதனகோபால் கும்பல், ஆயுதங்களுடன் வந்து போதையில் இருந்த சுரேஷை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது.. இவ்வளவும் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
பிரபல ரவுடி சுரேஷ் கொலை வழக்கில், அவரது ரகசிய காதலியே ஸ்கெட்ச் போட்டு தந்து உயிரை பறித்தது, சிவகாசியில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. சுரேஷை கொன்ற அத்தனை பேரும் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.. சுந்தரி உட்பட...!!












Click it and Unblock the Notifications