அப்பாவின் ஸ்கெட்ச்.. அம்மாவின் டிராமா.. நடுவழியில் சுதாரித்த நாகராணி.. விபரீதத்தை தடுத்த வாட்ஸ்அப்

காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்த முயன்ற தாய் மற்றும் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாத்திராயிருப்பில் தனது மனைவியை காரில கடத்தியதாக கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்ணின் அப்பா, அம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த பெண்ணை போலீசார் உடனடியாக மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் உள்ள லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 28). அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராணி(24) என்பவரை காதலித்து வந்தார்கள்.

இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரியவரவே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த மாதம் ராஜேஸ்வரன், நாகராணியை கல்யாணம் செய்தார். இந்த கல்யாணத்தில் நாகராணியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.

அம்மாவின் நாடகம்

அம்மாவின் நாடகம்

இந்தநிலையில் நாகராணிக்கு அவரது உறவினர் ஒருவர் போன் செய்தார். அதில் நாகராணியின் தாயார் முருகேஸ்வரிக்கு உடல் நிலை சரியில்லை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறியிருக்கிறார் இதையடுத்து நாகராணி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

வேறுபாதையில் பயணம்

வேறுபாதையில் பயணம்

அப்போது மேல் சிகிச்சைக்காக முருகேஸ்வரியை வேறு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என கூறி காரில் அழைத்து சென்றனர். அவர்களுடன் நாகராணி, இவரது தந்தை சேது மற்றும் உறவினர் சென்றுள்ளார்கள். ஆனால் கார் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வேறு பாதையில் செல்வதை உணர்ந்த நாகராணி அதிர்ச்சி அடைந்தார்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

அப்போது தான் நாகராணிக்கு தனது அம்மா, அப்பா நாடகம் ஆடி தன்னை கடத்தியது தெரியவந்தது. சுதாரித்துக் கொண்ட நாகராணி, உடனடியாக தனது கணவர் ராஜேஸ்வரனுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் இதுகுறித்து நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பெண் மீட்பு

பெண் மீட்பு

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராணியின் தந்தை சேது, தாயார் முருகேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் வந்த உறவினர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட பெண் நாகராணியை போலீசார் மீட்டு அவரது கணவர் ராஜேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+