வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று ராஜேந்திர பாலாஜி தலைமறைவு- விருதுநகர் எஸ்பி
விருதுநகர்: விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு வெவ்வேறு கார்களில் மாறி மாறி தப்பிச் சென்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என விருதுநகர் மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் டிசம்பர் 17-ஆம் தேதி அந்த மனு தள்ளுபடி செய்தது.

ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார்
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார் என்றதும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.17) முதல் தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடுகளில் அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

செல்போன்
ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 பேரின் எண்களை வைத்தும் போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவை கேரளா, கொடைக்கானல், கோவைக்கு விரைந்துள்ளன. ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு ஏற்கெனவே ஒரு தனிப்படை முகாமிட்டுள்ளது.

தீவிரம்
இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரையில் ஏற்கெனவே தனிப்படைகள் முகாமிட்டுள்ளார்கள். ராஜேந்திர பாலாஜியுடன் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமை போலீஸார் தேடி வருகிறார்கள்.

எஸ்பி அறிவிப்பு
விருதுநகரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராஜேந்திர பாலாஜி வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி முதல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications