விருதுநகரில் காஞ்சனாவை காணோமாமே.. 2 பிள்ளையைகூட நினைச்சு பாக்கலயே..அப்பளமாய் "நொறுக்கிய" கள்ளக்காதல்
விருதுநகர்: பேரக்குழந்தைகளை பார்க்காமல் தாத்தாவால் இருக்க முடியவில்லை.. ஊர் ஊராக தேடி கொண்டிருக்கிறார் இந்த பாசக்கார தாத்தா.. என்ன நடந்தது விருதுநகரில்?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ளது சாட்சியாபுரம்.. இந்த பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. தள்ளுவண்டியில் அப்பள வியாபாரம் செய்து வருபவர்.. இவரது மகள் காஞ்சனா தேவி.. 26 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் சோலைராஜ்.. இவர் சென்னையை சேர்ந்தவர்.

தம்பதி: இவர்களுக்கு திருமணம் நடந்து சில வருடங்களாகிறது.. 6 வயதில் சிவரஞ்சனி என்ற மகளும், 2 வயதில் கெவின்ராஜ் என்ற மகனும் இருக்கிறார்கள்.. கணவன் மனைவி, 2 குழந்தைகள் என 4 பேருமே சென்னையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், காஞ்சனாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சிகிச்சை பெற வசதியாக, காஞ்சனாவையும், குழந்தைகளையும், அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சோலைராஜ்.
செந்தில்: இந்நிலையில், தன்னுடைய அப்பாவின் அப்பள கடையில், செந்தில் என்பவர் வேலை பார்த்து வந்தார்.. இவர் பெரம்பலூர் மாவட்டம் கீரனூரை சேர்ந்தவராம்.. அதனால், அடிக்கடி மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்துபோகவும், காஞ்சனாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டது.. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.. இந்த விஷயம் மாரிமுத்துவுக்கு தெரியவரவும், செந்திலையும், காஞ்சனாவையும் கண்டித்தார்.
கள்ளக்காதலுக்கு தன்னுடைய அப்பா குறுக்கே நிற்கவும், காஞ்சனாவுக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. அதனால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அதே பகுதியில், தனியாக வாடகைக்கு வீடு எடுத்துக்கொண்டு போய்விட்டார்.
இது மாரிமுத்து அதிர்ச்சியை தந்தாலும், தன்னுடைய மகளையும், பேரக்குழந்தைகளையும் விட்டுவிட்டு இருக்க முடியவில்லை. அதனால், அடிக்கடி காஞ்சனா வீட்டிற்கு வந்து சென்று, பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டு போவார்.. அப்படித்தான், நேற்றும் காஞ்சனா வீட்டிற்கு சென்றுள்ளார்.. ஆனால், வீடு பூட்டிக்கிடந்தது.. இதனால், பக்கத்துவீட்டில் காஞ்சனா குறித்து விசாரித்தபோது, அவர் வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டதாக கூறியிருக்கிறார்கள்.
மாயமான மகள்: உடனே மகளுக்கு போனை போட்டுள்ளார் மாரிமுத்து.. ஆனால் காஞ்சனாவோ, "இனிமேல் தன்னை தேடி வரவேண்டாம், செந்திலுடன் குடும்பம் நடத்த கிளம்பிவிட்டேன்" என்று சொல்லி போனை துண்டித்துள்ளார். இதற்கு பிறகு என்ன செய்வதென்றே தெரியாத மாரிமுத்து, சிவகாசி டவுன் போலீசுக்கு ஓடினார்..
மாயமான தன் மகளையும், பேரக்குழந்தைகளையும் கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் தந்தார்.. போலீசாரும் புகாரை பெற்றுக் கொண்ட காஞ்சனாவை தேடி கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில் சிகிச்சைக்காக மனைவியை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்த பரிதாப சோலைராஜ், என்ன ஆனார் என்றே தெரியவில்லை.












Click it and Unblock the Notifications