தங்க நகைகளில் புரண்டு.. 50 பெண்களுடன் முதலிரவு! உல்லாசத்தில் திளைத்த விருதுநகர் சூர்யா யார் பாருங்க
விருதுநகர்: இன்றைய சூழலில் தொழில்நுட்பங்கள் பெருகி வருகின்றன.. அதற்கேற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.. ஒருபக்கம் தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் நகை பறிக்கும் செயல்கள் நடக்கிறதென்றால், மற்றொருபக்கம் வரதட்சணை என்ற பெயரில் பணத்தையும், நகையையும் பறிக்கும் கொடுமை நடந்து வருகிறது. இதற்குநடுவில் திருமண மோசடிகளுக்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கில்லை.. இப்போது சென்னையில் நடந்த கொடுமையை பாருங்கள்
சென்னை சூளைநகர் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.. இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார்.

கோயம்பேடு நர்ஸ்
இவருக்கு திருமணம் செய்வதற்காக, மேட்ரிமோனியல் ஒன்றில் பெற்றோர் பதிவு செய்துள்ளார்கள்.. ஒருநாள், சூர்யா என்ற இளைஞர் நர்ஸுக்கு போன் செய்துள்ளார்..
உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று சொல்லி கோயம்பேடு பகுதிக்கு நர்ஸை வரவழைத்துள்ளார்.. நர்ஸ் அங்கு சென்றதுமே, திடீரென ஒரு கிஃப்ட்டை தந்து, எடுத்த எடுப்பிலேயே ஆச்சர்யப்படுத்திவிட்டாராம் சூர்யா...
இதற்கு பிறகு நர்ஸூம், சூர்யாவும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்திருக்கிறார்கள்... நாளுக்கு நாள் நெருங்கி பழகியதுடன், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் நர்ஸை நம்ப வைத்துள்ளார் சூர்யா.. இதனால் சில இடங்களுக்கு இருவரும் சுற்றித்திரிந்து ஜாலியாகவும் இருந்து வந்துள்ளனர்.
தங்க நகைகள், பணம்
பிறகு ஒருநாள் நர்ஸிடம் சூர்யா பேசும்போது, நாம் கல்யாணத்துக்கு பிறகு சென்னையில் சொந்த வீட்டில்தான் வாழணும்.. என்னிடம் 40 லட்சம் ரூபாய் இருக்கு.. மிச்சம் 10 லட்சம் இருந்தால் கடன் இல்லாமலேயே சொந்தமாக வீட்டை வாங்கிடலாம் என்று சொல்லி உள்ளார். உடனே நர்ஸும், தன் சேமிப்பில் வைத்திருந்த பணம், 8 சவரன் நகை, இதைத்தவிர, பேங்கில் லோன் போட்டு ரூ.8.7 லட்சம் பணம் என அனைத்தையும் சூர்யாவிடம் தந்துள்ளார்.
மொத்தத்தையும் பெற்றுக்கொண்ட சூர்யா, இப்போது தன்னுடைய வேலையை காட்ட துவங்கினார்.. கல்யாண பேச்சை நர்ஸ் எடுத்தாலே தவிர்க்க ஆரம்பித்தார்,. அப்போதுதான், சூர்யாவிடம் தான் ஏமாந்து நிற்பது நர்ஸுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து நேரடியாகவே சூர்யாவிடம் நர்ஸ் கேட்டதற்கு, நீயும் நானும் ஹோட்டலில் ஜாலியாக இருந்த வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார் அத்துடன், செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நர்ஸ், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்..
அந்த புகாரில், "மேட்ரிமோனி மூலம் எனக்கு பொருத்தமான வரனை தேடிக் கொண்டிருந்தபோது, சூர்யா என்ற 25 வயது நபர் என்னை தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், உங்கள் போட்டோவை பார்த்தேன், நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.. உங்களை நேரில் பார்க்க வேண்டும்" என்று ஆசைவார்த்தை கூறினார்.
நர்ஸூடன் உல்லாசம்
இதையடுத்து நானும் அவரை நேரில் சந்தித்தேன்.. அப்போது அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, என்னிடம் உடலுறவு வைத்துக்கொண்டார்.. அதற்கு பிறகு அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டார். எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் பெண் கேட்டுக் கொண்டிருந்தார். .
இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் சூர்யா தலைமறைவாகிவிட்டார். இதனால், சூர்யாவை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சிரமமாக இருந்தது.
இந்த நேரத்தில்தான், சூர்யாவின் கார், நெல்லை மாவட்ட டோல்கேட்டில் கடந்து செல்லும் சிசிடிவி தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனே அந்த கார் நம்பரை வைத்து, அவர் எங்கே இருக்கிறார் என்று தேடும் படலம் ஆரம்பமானது..
விருதுநகர் இளைஞர் சூர்யா
இறுதியில், நெல்லை மாவட்டத்தில் அந்த நபர் பதுங்கியிருப்பது தெரியவந்ததுமே, நெல்லைக்கே அண்ணா நகர் போலீசார் கிளம்பி சென்றனர்.. ஆனால், அங்கு சென்றும் சூர்யாவை கண்டுமுடிக்கவில்லை என்பதால், 15 நாட்கள் நெல்லையிலேயே தங்கியிருந்து தேடினார்கள்.. இறுதியில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர்..
கைது செய்யப்பட்ட சூர்யாவை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.. அமைந்தகரை கூவம் ஆற்றின் அருகே போலீஸார் அவரை அழைத்து வந்தபோது, திடீரென போலீசாரின் பிடியில் இருந்து சூர்யா தப்பியோட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், சூர்யாவின் இடது கால் முறிந்தது. இதையடுத்து, உடனடியாக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. பிறகு சிகிச்சை முடிந்தபிறகு, சூர்யாவை போலீசார், புழல் ஜெயிலில் அடைத்தனர்.
50 பெண்களுடன் முதலிரவு
பிறகு சூர்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது பல்வேறு தகவல்களை கூறி போலீசாரையே திகைக்க வைத்துவிட்டாராம் சூர்யா..
சம்பந்தப்பட்ட நர்ஸ் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 50-க்கும் மேற்ப்பட்ட பெண்களை சூர்யா பலாத்காரம் செய்துள்ளாராம்.. அனைவரையுமே இதே மேட்ரிமோனியலில் வலைவீசி, அவர்களை திருமணம் செய்வதாக சொல்லி நம்ப வைத்துள்ளார்..
அந்த பெண்களின் நம்பிக்கையை பெற்றதுமே, உடலுறவு வைத்து கொள்வாராம்.. இறுதியில், செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு, அந்த ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு சென்று விடுவாராம்.. இதுவரை இப்படி 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஜாலியாக இருந்திருப்பதாக தன்னுடைய வாக்குமூலத்தில் சூர்யா கூறியிருக்கிறார்.
யாரிந்த சூர்யா
சூர்யாவின் காரில் SPCL Secretary International Human Rights & Crime Control Council என்ற பெயரில் சிகப்பு நிறத்தில் போர்டு வைத்திருக்கிறாராம்.. இந்த போர்டு வைத்தால், பெண்கள் தன்னை எளிதாக நம்பி விடுவார்கள் என்றும் கணக்கு போட்டுள்ளார்.
ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருவதாக பெண்களிடம் சொல்லி நம்ப வைத்ததுடன், சூளைமேடு பெண்ணிடம் சொன்னதை போலவே, புது புது கதைகளை சொல்லி 50 பெண்களையுமே பலாத்காரம் செய்து, பண மோசடி செய்திருக்கிறார் சூர்யா.. இத்தனைக்கும் சூர்யாவின் அப்பா மத்திய உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராம்..!!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications