சிலுசில்லுன்னு நடுங்கிய ராஜபாளையம்.. பாலத்தின் மீது தனியாக நின்ற "தலை".. அருகே போய் பார்த்தால் ஷாக்
சென்னை: விருதுநகர் ராஜபாளையம் அய்யனார் கோவில் அருகே பாலம் ஒன்றில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதி மக்கள் மொத்தமாக கூடி வந்து பாலத்தில் பார்க்கும் அளவிற்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அங்கே நடந்துள்ளது. அங்கே என்ன நடந்தது.. மக்கள் விக்கித்து நிற்க என்ன காரணம்?
விருதுநகர் ராஜபாளையம் அய்யனார் கோவில் விவசாயிகள் அதிகம் உள்ள கிராமம். இந்த ஊரை இணைக்கும் பாலத்தில்தான் அந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த பாலத்தை தினமும் விவசாயிகள் பலர் கடப்பது வழக்கம். விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் அடிக்கடி இந்த சாலையில் செல்வார்கள்.

அப்படித்தான் இன்று காலை அங்கே விவசாயிகள் சென்ற போது ஷாக் சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. அதிகாலையில் சென்ற சில விவசாயிகள் பாலம் மீது ஒரு உருவம் போன்று இருந்ததை பார்த்து உள்ளனர். அதை முதலில் சோளக்காட்டு பொம்மை என்று நினைத்து உள்ளனர்.
மக்கள் கூட்டம்: கொஞ்சம் பொழுது விடிந்தது, மீண்டும் பார்த்தால் அது ஒரு மனித தலை. ரத்தம் எல்லாம் உறைந்து போய் மிக கொடூரமான தோற்றத்தில் அந்த தலை காணப்பட்டு உள்ளது. அதோடு அந்த தலை முற்றிலும் அழுகியும் போய் உள்ளது. வயதானவர்கள் உடனே ஊருக்குள் சென்று மக்களிடம் தெரிவித்தனர்.
ஊரில் இருந்த மக்களிடம் சென்று தெரிவிக்க.. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். முக்கியமாக ஊர் தலைவர்கள், கவுன்சிலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சிறுவர்கள் கூட கூட்டமாக வந்து பாலத்தில் நின்றனர். பாலத்தை பார்த்தவர்களுக்கு பெரிய ஷாக். காரணம் பாலத்தின் மீது அந்த தலை அப்படியே இருந்துள்ளது.
தலை மோசமாக சேதம் அடைந்த நிலையில் மிக மோசமான நிலையில் தலை காணப்பட்டு உள்ளது. இதை அடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மக்கள் இதற்குள் அங்கே பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் கூடினர். அங்கே தலைக்கு சொந்தமான உடல் இருக்கிறதா என்று மக்கள் தேட தொடங்கினர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. இதற்கு இடையே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
போலீசார் வந்த பின் அங்கிருந்த மக்களை மொத்தமாக அப்புறப்படுத்தினர். பாலத்தை மூடினர். பாலத்தை சோதனை செய்த போலீசுக்கும் ஷாக். அங்கே இருந்த தலை அழகாக வைக்கப்பட்டு, கல் கொண்டு முட்டுக்கொடுக்கப்பட்டு உள்ளது. அதோடு இல்லாமல்.. அந்த தலை மொத்தமாக சிதைந்து காணப்பட்டது. இதனால் அந்த தலையை அடையாளம் காண முடியவில்லை.
இதையடுத்து போலீசார் அந்த தலையை பேக் ஒன்றில் வைத்து எடுத்து சென்றனர். இன்னொரு போலீசார் பிரிவினர் அங்கே உடல் இருக்கிறதா என்று தேடினர். அங்கே தலைக்கு சொந்தமான உடல் இருக்கிறதா என்று போலீசார் தேட தொடங்கினர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. உடல் ஆற்றில் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கி உள்ளனர். அந்த ஊரில் காணாமல் போனவர்களின் லிஸ்ட் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தலை யாருக்கு சொந்தம்.. எப்படி இங்கே வந்தது.. கொலை செய்தது யார் என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications