"ஆபாச வீடியோ".. விருதுநகர் மேட்டரில் சிக்க போகும் "விஐபிகள்"?.. அர்ச்சனாவின் அதிரடி ஆரம்பம்
விருதுநகர் சம்பவத்தின் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது
விருதுநகர்: தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணை துரிதமாகி உள்ளது..!
விருதுநகர் பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைதாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், 8 பேர் கைதாகி உள்ளனர்.
அவர்கள் மீது பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. எனினும், விருதுநகர் மாவட்ட அரசியலில் கொந்தளிப்பை தந்து வருகிறது..

பட்டியலின பெண்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளான ஹரிஹரன், ஜுனைத் அகமது போன்றோர் இந்த பெண் மட்டுமல்லாது இப்படி பல பெண்களையும் இதற்கு முன்பு நாசம் செய்துள்ளர் என்ற அடுத்த தகவலும் வெளியாகி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த சம்பவத்தை விசாரிக்க, புலன் விசாரணை அதிகாரியாக அர்ச்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

அர்ச்சனா
"விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் இந்த வழக்கு புலன்விசாரணை காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கூர்நோக்கு இல்லம்
இப்போது அர்ச்சனாவின் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. பாதிக்கப்பட்ட இளம்பெண் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூக நலத்துறை ஆலோசனையின்பேரில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்.. கைதாகி உள்ளவர்களில் 8 பேரில் 4 பேர் மாணவர்கள்.. அதாவது ஒருவர் 9ம் வகுப்பு படிக்கிறார்.. இன்னொருவர் பிளஸ்-1, மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் ஆவார்.. இவர்கள் மதுரையில் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் மாணவர்கள் என்பதால் விசாரணையை மிக ஜாக்கிரதையாக கையாண்டு வருகிறது போலீஸ் தரப்பு.

பாலியல் வீடியோ
முதல்வேலையாக, இந்த சம்பவத்தில் பெண்ணின் ஆபாச வீடியோ சோஷியல் மீடியாவில் பரப்பப்பட்டதா? அல்லது வேறு யாருக்காவது ஷேர் செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றின தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.. காரணம், கைதான 8 பேரும் அளித்த வாக்குமூலத்தில் "பாலியல் வீடியோவை காட்டியே இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.. அதனால்தான்தான் சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியாகி இருக்குமோ என்கிற அச்சத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

அர்ச்சனா
மேலும், இந்த பாலியல் பலாத்காரத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளதாம்... இந்த நபர்கள், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதால், இவர்களுக்கு துணையாக உள்ளவர்கள் யார் என கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். விருதுநகர் சம்பவத்தை கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது..

யார் அந்த விஐபி
எப்படி பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததோ, அதேபோன்று விருதுநகர் பாலியல் சம்பவத்திலும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.. இவர்கள் யார் என்று தெரியவில்லை.. இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... எப்படியும் விருதுநகர் பாலியல் வழக்கு விசாரணையின்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications