உடைந்த "வளையல்".. நொறுங்கிய ஜன்னல்.. நீங்காத மஞ்சள் "தாலி வாசம்".. அதிர்ந்த அருப்புக்கோட்டை.. ஏன்?
அருப்புக்கோட்டை இளம்பெண் மர்ம மரணத்தில் உறவினர்கள் போராட்டம் செய்தனர்
விருதுநகர்: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட முடிவு காரணமாக, அருப்புக்கோட்டையே அதிர்ந்து போயுள்ளது.. என்ன காரணம்?
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்து.. இவரது மகள் ஜெபஸ்லீ... இவரது கணவர் ஜெகதீஷ்.. மானாமதுரை அருகே உள்ள மேலபசலையை சேர்ந்தவர் ஜெகதீஷ்.
முதுகுளத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஜெகதீஷ் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து 6 மாதங்கள்தான் ஆகிறது..

ஜெபஸ்லீ
திருமணம் முடிந்ததும், ஜெபஸ்லீ மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் மானாமதுரையில் உள்ள பர்மா காலனியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.. தம்பதிக்குள் சமீபகாலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.. இந்நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்பாக, இதே குடும்ப பிரச்சனை காரணமாக ஜெபஸ்லீ தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. இந்த தற்கொலைக்கு ஜெகதீஷ் குடும்பத்தினர்தான் காரணம் என்று ஜெபஸ்லீ தரப்பில் குற்றம் சாட்டினர்.. இந்த குற்றச்சாட்டையடுத்து, இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.

மர்ம மரணம்
பின்னர் ஜெபஸ்லீ உடல் மானாமதுரை அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டது.. உடனே ஜெபஸ்லீ உறவினர்கள், மானாமதுரை அரசு மருத்துவமனை முன்பாக கூடி மறியலிலும் ஈடுபட்டனர்... மரணத்தில் மர்மத்தை இப்போதே கண்டுபிடிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஜெபஸ்லீ கணவரான ஜெகதீஷ் மீதும் அவர்கள் போலீசில் புகார் தந்தனர்.. இதனால் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ், இந்த மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தருவதாக உறுதியளித்தனர்.

கண்ணாடி ஜன்னல்
அப்போதும் அவர்கள் யாருமே கலைந்து செல்லவில்லை.. சடலம் மருத்துவமனையில் இருப்பதால் அங்கே வந்திருந்த ஜெகதீசையும், அவரது உறவினர்களையும் ஜெபஸ்லீ குடும்பத்தினர் தாக்க முயன்றனர்... இதில் அரசு மருத்துவமனையின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.. உடனே ஜெகதீசை போலீசார் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அப்போதும், பெண் வீட்டினர் ஆவேசமாக காணப்பட்டனர், ஜெகதீஷ் குடும்பத்தை தாக்க முயன்றனர்.. இதனால், மருத்துவமனையின் ஒரு ரூமின் கண்ணாடி உடைந்ததில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் படுகாயம் அடைந்தார்.. இதனால் அவருக்கு அங்கேயே சிகிச்சை தரப்பட்டது..

வளையல் துண்டுகள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் அதிகமாக குவிக்கப்பட்டனர். பிறகு, கோட்டாட்சியர் சுகிதா, தாசில்தார் சாந்தி மற்றும் போலீசார் அவர்களும் சம்பவ இடத்தக்கு விரைந்து வந்தனர்.. நீண்ட நேரம் அனைவரும் சேர்ந்து பேசி சமாதானம் செய்த பிறகுதான், சடலத்தை பெற்றுக் கொண்டனர்.. எனினும், ஜெபஸ்லீயின் அம்மா அங்கு நின்று கொண்டு அழுது கொண்டே இருந்தார்.. மகள் இறந்துவிட்டதாக தகவல் வந்ததுமே வீட்டிற்கு வந்து பார்த்தால், அவரது உடலில் காயங்கள் நிறைய இருந்தனவாம்.. கைவளையல்கள் உடைந்து கிடந்ததாகவும், மகளின் இறப்பில் பல மர்மம் உள்ளதாக தான் சந்தேகிப்பதாகவும் செய்தியாளர்களிடமும் கண்ணீர் வடித்து கூறினார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications