சோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்
விதவை பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளனர்
விருதுநகர்: சோளக்காட்டில் சடலமாக கிடந்தார் விதவை பெண்.. செருப்புகள் சிதறி கிடக்க.. ஆடைகள் களைந்து கிடக்க.. கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக விழுந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊர் பரளச்சி ராணிசேதுபுரம்.. இங்கு வசித்து வந்தவர் சத்தியபாமா.. 48 வயதாகிறது.. கணவர் கனகராஜ் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவர்களுக்கு ஒரே மகன்.. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.. சத்யபாமாவுக்கு சொந்தமாக விவகாய நிலம் உள்ளது.. சோளக்காட்டிற்கு தினமும் சென்று வேலைகளை கவனித்து வருவார்.. காலையில் போனால் சாயங்காலம் வரை சோளக்காட்டில்தான் இருப்பார் சத்யபாமா.

சொந்த ஊர்
சில தினங்களுக்கு முன்பு அம்மாவை பார்க்க சொந்த ஊருக்கு வந்துள்ளார் மகன்.. சம்பவத்தன்று ஒரு கல்யாணத்துக்காக மகன் சென்றுவிட்டார். சத்தியபாமா வழக்கம்போல சோளக்காட்டுக்கு கிளம்பினார்.. விவசாயக் காட்டில் பாசிப்பயறு விளைந்து வருவதால், அதை பறிக்கும் வேலை அன்று இருப்பதாக சொல்லி இருந்தார்.

காட்டுப்பகுதி
ஆனால் நடுராத்திரி ஆகியும் சத்யபாமா வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காட்டுப்பகுதியில் சத்யபாமாவை தேடி போனார்கள். வெளியூர் போயிருந்த மகனுக்கும் தகவலை சொன்னார்கள்.

மோப்ப நாய்
பிறகு போலீசுக்கும் விஷயத்தை தெரிவித்தனர். மோப்பநாயுடன் விரைந்து விரைந்து வந்த போலீசாருடன், ஊர்மக்களும் சத்யபாமாவை தேடினர். ராத்திரியெல்லாம் தேடியும் சத்யபாமா கிடைக்காத நிலையில்.. செருப்பு மட்டும் தனியாக விழுந்து கிடந்தது.. விடிந்ததும்தான் சடலமாக கிடைத்தார்.

விசாரணை
அவரது ஆடைகள் களைந்து கிடந்தன.. யாரோ பலாத்காரம் செய்து... கழுத்தையும் கொடூரமாக அறுத்துள்ளனர்.. சடலத்தை சோளக்கதிர்களை வைத்து மறைத்து விட்டு சென்றுள்ளனர் என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமான அடுத்தக்கட்ட விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. விதவை பெண்ணை பலாத்காரம் செய்து, கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications