கொரோனாவால் பலி.. கணவரை அடக்கம் செய்த கையோடு.. மனைவி தூக்கிட்டு தற்கொலை.. விருதுநகர் சோகம்!
விருதுநகர்: கணவரை அடக்கம் செய்த உடனேயே வீட்டுக்கு வந்து மனைவி தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. வைரஸ் பாதித்து கணவர் இறந்த சோகம் தாங்காமல், அழுதுகொண்டே இருந்தவர், திடீரென தற்கொலை செய்து கொண்டது விருதுநகரில் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.
விருதுநகரில் வசித்து வருபவர் பிரபாகர்.. ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார்.. மனைவி பெயர் ராமபிரபாவதி.. ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக இருந்தவர்.. 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 24-ம் தேதி பிரபாகருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.. அதில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததும் உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
3 நாட்கள் தீவிரமான சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிர் பிரிந்துவிட்டது.. இதையடுத்து அவரது சடலத்தை சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு வந்து, நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
பிரபாகருக்கு ஏற்கனவே தொற்று இருந்ததால், 2 மகள்களுக்கும் டெஸ்ட் செய்ய உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கிளம்பி சென்றனர்.. தன் அம்மாவையும் தங்களுடன் டெஸ்ட் எடுக்க வருமாறு அழைத்தனர்.. ஆனால், ராமபிரபாவதி மறுத்துவிட்டார்.. அடக்கம் செய்துவிட்டு வந்ததில் இருந்து கணவரை நினைத்து அழுது கொண்டே இருந்தார்.
இதனால் அவரை சமாதானப்படுத்த முடியாமல், மகள்கள் இருவரும் அழுதுகொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.. அப்போது வீட்டில் தனியாக இருந்த ராமபிரபாவதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தகவலறிந்து வந்த விருதுநகர் போலீசார் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்..
கணவன் இறந்து ஒரே நாளில் மனைவியும் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... 2 மகள்களும் தற்போது தாய்-தகப்பன் இன்றி கலங்கி நிற்கின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications