ஆண்களுடன் அடிக்கடி பேச்சு.. மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆண்களுடன் அடிக்கடி பேச்சு.. மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை -வீடியோ

    ஸ்ரீவில்லிபுத்தூர்: எப்பப் பார்த்தாலும் ஆண்களுடன் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை வெட்டிக் கொன்றார். அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெபஸ்டியன். இவர் மனைவி மோட்சம். இவர் எப்போது பார்த்தாலும் ஆண்களிடம் பேசுவாராம். இதனால் மனைவி மீது சந்தேகப்பட்டுள்ளார் ஜெபாஸ்டியன்..

    wife murdered husband gets life sentence

    இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டை போடுவதும், கூடுவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மோட்சம் விறகு எடுக்க சென்றிருந்த போது அங்கு வந்த கணவன் ஜெபஸ்டியன் அரிவாளால் மனைவியை வெட்டி கொலை செய்தார்.

    இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் ஜெபஸ்டியனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+