ஓயாமல் பணம் கேட்டு நச்சரித்த ஈஸ்வரி.. கடுப்பான பக்கத்து வீட்டுக்காரர்.. கழுத்தை நெரித்துக் கொலை!
பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்
விருதுநகர்: ஓயாமல் பணம் கேட்டு நச்சரித்து வந்த அங்காள ஈஸ்வரியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார் பக்கத்து வீட்டுக்காரர் அடைக்கலம்!
அருப்புக்கோட்டை அருகே அத்திப்பட்டியை அடுத்துள்ள கட்டக்கஞ்சன்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் திருமுருகன். அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி, 35 வயது!

இந்நிலையில் நேற்று அங்காள ஈஸ்வரி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அங்காள ஈஸ்வரியின் தந்தை காளிமுத்து அருப்புக்கோட்டை போலீசில் புகார் தந்தார். அதன்படி நடந்த விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
பக்கத்து வீட்டில் வசிக்கும் அடைக்கலம் என்பவருடன் அங்காள ஈஸ்வரிக்கு கள்ள உறவு இருந்திருக்கிறது. அடைக்கலத்துக்கு 45 வயதாகிறது. தன் மீது அடைக்கலம் ஏகப்பட்ட ஆசையில் இருப்பதை அங்காள ஈஸ்வரி, அடிக்கடி பணம் கேட்டு வாங்கி உள்ளார்.
இதுவரை கொஞ்சம் கொஞ்சமாக 2 லட்சம் ரூபாய் வரை கறந்துவிட்டார். இதை தவிர இன்னும் பணம் வேண்டும் என்று அடிக்கடி அடைக்கலத்தை தொந்தரவும் செய்திருக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது.
நேற்றுகூட பணம் கேட்டு ஈஸ்வரி தொந்தரவு செய்ய, ஆவேசம் அடைந்த அடைக்கலம் அவரது கழுத்தை நெறித்து கொலையே செய்துவிட்டார். இதெல்லாம் போலீசார் விசாரணையில் உறுதியானதையடுத்து, அடைக்கலம் கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications