கண்களில் கருப்பு துணி கட்டி நீட் தேர்வை எதிர்த்து.. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்
விருதுநகர்: கண்களில் கருப்பு துணி கட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Recommended Video
தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம், சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

உயிரைப் பறிக்கும் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் சிபிஎஸ்இ மற்றும் மாநிலக் கல்வி குழு என்ற இரு வேறு பிரிவில் பாகுபாடு காட்டியும் நடத்தப்படும்.
கல்வி முறையை சீர்படுத்த வலியுறுத்தியும் மேலும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கண்களில் கறுப்பு துணி கட்டியும், கையில் தூக்கு கயிற்றை வைத்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ வாபஸ் பெறுவதுடன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்ற மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிக்கை எழுந்தது.
அதுபோல் தஞ்சையிலும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தஞ்சையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட்டால் இறந்த மாணவர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்காததற்கு மாணவர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அது போல் சேலத்திலும் இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications