இதுவரை இல்லாத வகையில் ஜோ பிடனின் டீமில் 25 அமெரிக்கா வாழ் இந்தியர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனின் (ஜோ பைடன்) பல்வேறு நிர்வாக குழுக்களில் இதுவரை இல்லாத வகையில் 25 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அடுத்த மாதம் ஜோ பிடன் பதவியேற்க உள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் பதவியேற்கிறார். கமலா ஹாரீஸின் தாயார் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் ஜோ பிடன் பல்வேறு நிர்வாகக் குழுக்களை நியமித்து வருகிறார். இந்த குழுக்களில் இதுவரை 25 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 15 பேர் கொள்கை முடிவு எடுக்கும் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் செலின் கவுண்டர், நீரா டாண்டன், விவேக் மூர்த்தி, ரோஹினி கோசோக்லு, பரத் ராமமூர்த்தி, வேதாந்த் படே, வினய் ரெட்டி, கவுதம் ராகவன் ஆகியோர் முக்கியமானவர்கள். விவேக் மூர்த்தி, நீரா டாண்டென் ஆகியோர் ஒபாமா அதிபராக இருந்த போதும் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள்தான்.
செலின் கவுண்டர், அதுல் கவாண்டே, பரத் ராமமூர்த்தி ஆகியோர் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் நிக்கி ஹாலே, சீமா வர்மா என ஒருசில அமெரிக்கா வாழ் இந்தியர்கள்தான் நிர்வாகப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications