டிரம்பின் கண்ணை உறுத்தும் ரூ.4 லட்சம் கோடி.. இந்தியாவை குறிவைத்து அமெரிக்கா வரி போடுவது ஏன்? பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானை அரவணைக்க தொடங்கி உள்ளது. அதேவேளையில் நம் நாட்டுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். இந்த புதிய வரி வரும் 7 ம் தேதி (நாளை மறுநாள்) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கினால் இந்தியாவுக்கு கூடுதல் வரிகளை விதிக்க உள்ளதாக டிரம்ப் மிரட்டி உள்ளார். டொனால்ட் டிரம்ப் இப்படி நம் நாட்டை குறிவைத்து மிரட்டுவதன் பின்னணியில் ரூ.4 லட்சம் கோடி இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் ஒவ்வொரு நாடுகளுக்கும் வரிகளை விதித்து வருகிறார். அந்த வகையில் நம் நாட்டுக்கு 25 சதவீத வரிகளை விதித்துள்ளார். இது வரும் 7 ம் தேதி (நாளை மறுநாள்) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை விற்பனைக்கு அனுப்பும்போது இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரியை செலுத்த வேண்டியிருக்கும். நம் நாட்டுக்கு டொனால்ட் டிரம்ப் 25 சதவீத வரி விதித்து இருப்பது மட்டுமின்றி ஆணவமாக பேசி வருகிறார். அதோடு தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
சமீபத்தில் டொனால்ட் டிரம்ப், ‛‛‛உலகிலேயே அதிக வரி போடும் நாடு இந்தியா தான். இந்தியா நட்பு நாடு என்றால் வர்த்தகத்தில் நல்ல உறவு இல்லை. உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த நாடுகள் முயற்சிக்கும் போது, சீனாவை போல ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களையும் வாங்குகிறார்கள். இந்த பணத்தை வைத்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கிறது. இதனால் வரியோடு, இந்தியாவுக்கு கூடுதல் அபராதமும் விதிக்கப்படும்'' என்று கூறினார்.
அதுமட்டுமின்றி ‛‛இந்தியா ரஷ்யாவுடன் சேர்ந்து என்ன வேண்டுமானாலும் செய்யப்பட்டும். அதுபற்றி எனக்கு கவலையில்லை. இந்தியா - ரஷ்யா பொருளாதாரம் செத்துப்போய்விட்டது. இனியும் இருநாடுகளின் பொருளாதாரமும் சிதைந்து போகட்டும்'' என்று கூறினார். அதேபோல், ‛‛இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்துவது மட்டுமின்றி மார்க்கெட்டில் அதனை விற்பனை செய்து பெருமளவு லாபம் சம்பாதிக்கிறது. இதனால் இந்தியாவுக்கு கூடுதல் வரியும் விதிக்கும் திட்டம் உள்ளது'' என்று மிரட்டி உள்ளார்.
அமெரிக்காவை விட ரஷ்யாவிடம் இருந்து தான் அதிகமான பொருட்களை நம் நாடு இறக்குமதி செய்கிறது. இதன்மூலம் நம் நாட்டின் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரம் வளம்பெறுகிறது. இது டிரம்புக்கு பிடிக்கவில்லை. அதேபோல் அமெரிக்கா - இந்தியா வர்த்தகத்தை எடுத்து கொண்டால் நம் நாடு தான் அதிக வர்த்தகம் செய்கிறது. அதாவது, அமெரிக்காவிடம் இருந்து நாம் இறக்குமதி செய்யும் பொரட்களை விட அதிகமான பொருட்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
உதாரணமாக 2024 நிதி ஆண்டில் நாம் அமெரிக்காவுக்கு 7.6 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை ஏற்றுமதி செய்தோம்.ஆனால் அமெரிக்கா நமக்கு ரூ.3.6 லட்சம் கோடி பொருட்களை மட்டுமே விற்பனை செய்தது. அதன்படி பார்த்தால் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் நாம் ரூ.4 லட்சம் கோடி வரை அதிகம் வர்த்தகம் செய்துள்ளோம்.
இது டொனால்ட் டிரம்பின் கண்ணை உறுத்துகிறது. தங்களிடம் ஆண்டுதோறும் அதிகமான பொருட்களை விற்பனை செய்யும் இந்தியா, எதிரியான ரஷ்யாவிடம் கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்வதை டிரம்பால் தாங்க முடியவில்லை. இதனால் தான் டிரம்ப் பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகையில் அவரை சந்தித்த மோடியிடம், அமெரிக்கா ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு தர தயாராக உள்ளது. 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானங்களை தருகிறோம் என்று ஆஃபர் வழங்கினார்.
இந்த ஆஃபர் அனைத்தும் ரஷ்யாவுடனான நம் வர்த்தகத்தை முடக்கும் வகையில் தான் டிரம்ப் வழங்கினார். ஆனால் அமெரிக்காவை விட ரஷ்யா தான் முக்கியம் என்று நம் நாடு எஃப் 35 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவிடம் எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. இது டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த 4 லட்சம் கோடி ரூபாய் வர்த்தக உபரியை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என்று துடிக்கிறார் டிரம்ப். இதனால் தான் தான் நம்மை வழிக்கு வர வைக்க கூடுதல் வரியை தற்போது டிரம்ப் விதித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications