"இதயச் சிறை"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் "உல்லாசத்தில்" அமெரிக்க ஜோடி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கைதிகயை 13 ஆண்டுகளாக காதலித்து வந்த அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் அரசிடம் அனுமதி பெற்று திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தம்பதிக்கு சிறைக்குள்ளேயே குடும்பம் நடத்த தனியாக ஒரு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரை சேர்ந்தவர் நினா. இவருக்கு 16 வயதாக இருந்த போது, அதாவது 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக மைக்கேல் என்ற 17 வயது சிறுவனை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இந்த சம்பவத்துக்கு பிறகு ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையை அமெரிக்கா நீதிமன்றம் வழங்கியது.

23 ஆண்டுகள் தண்டனை

23 ஆண்டுகள் தண்டனை

இதையறிந்த நினாவின் இதயம் நொறுங்கியது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்ததோடு, மைக்கேலுக்கு கடிதம் எழுதுவதாக நினா உறுதியளித்தார். இதையடுத்து மொத்தம் 23 ஆண்டுகள் தண்டனையில் 6 ஆண்டுகளுக்கு இவர்கள் கடிதம் மூலம் காதலித்தனர்.

தோழிக்கு தெரிவித்த நினா

தோழிக்கு தெரிவித்த நினா

இதையடுத்து காதல் வளர்ந்து கொண்டே இருந்ததால் 2012-ஆம் ஆண்டு சிறையில் இருவரும் சந்தித்து கொண்டனர். இதையடுத்து அடிக்கடி சந்தித்து வந்தனர். பின்னர் இந்த காதல் குறித்து நினா, தனது தாய் மற்றும் தோழிக்கு மட்டுமே தெரிவித்துள்ளார்.

அனுமதி

அனுமதி

மைக்கேலும், நினாவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். இதையடுத்து மேலும் 6 ஆண்டுகள் காத்திருந்த அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தம்பதி மாதத்துக்கு 48 மணி நேரங்கள் வரை பார்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

சிறை தண்டனை

சிறை தண்டனை

இவர்களுக்காக சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வீடும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மைக்கேலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதலங்களில் நினா பகிர்ந்துள்ளார். கலிபோர்னியாவில் 2014-ஆம் ஆண்டு சிறை தண்டனை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

3 மாதம் பரோல்

3 மாதம் பரோல்

அதன்படி 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பெற்ற இளம் தம்பதிகளுக்கு 3 மாதங்கள் பரோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மைக்கேல் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்துவிட்டார். இன்னும் 2 ஆண்டுகள் தண்டனை முடிந்துவிட்டால் அவருக்கு 3 மாதம் பரோல் கிடைக்கும் என நினா சந்தோஷத்தில் உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+