ஷாக்! அழகான ஆலப்புழாவுக்கு ஆபத்து.. கேரளாவை கதிகலங்க வைத்த ரிப்போர்ட் - இந்தியா மேப்பே மாறப்போகுதே
வாஷிங்டன்: புவி வெப்பமயமாவதன் காரணமாக கடல் மட்டம் உயர்வதால் 2050 ஆம் ஆண்டுக்குள் கேரள மாநிலத்தின் 4 மாவட்டங்கள் கடலுக்குள் செல்லும் என அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவை அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் பிரச்சனை பருவநிலை மாற்றமும், புவி வெப்பமயமாதலும்தான். புவியின் வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பணிப்பாறைகள் உருகி கடல் மட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் கடலுக்குள் மூழ்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவிம் நியூ ஜெர்சியை தலைமையிடமாக கொண்ட கிளைமேட் செண்டிரல் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடல் மட்டம் அதிகரிப்பதால் கேரள மாநிலத்தின் முக்கிய பகுதிகளுக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2050 ஆம் ஆண்டில் ஒரு மீட்டர் அளவுக்கு கடலின் நீர் மட்டம் உயரும் என்று முந்தைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில்தான் பாதிக்கப்படும் பகுதிகளை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், புவி வெப்பமயமாவதன் காரணமாக ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகி கடலில் கலந்து கடல் மட்டம் அதிகரிக்கும் என்றும், குறிப்பாக அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.
அதில் அரபிக் கடலை ஒட்டிய கேரள மாநிலத்தின் 4 மாவட்டங்கள் கடலுக்கு மூழ்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நிறுவனம் எச்சரித்து உள்ளது. ஏற்கனவே வெளியான அறிக்கையில், கேரளாவின் கொச்சி தீவுகள், வைக்கம், குட்டநாடு போன்ற பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோன்று, கோட்டையம் மாவட்டத்தின் அச்சினகம், பிரம்மமங்கலம், தலையாழம், செம்மநடுக்கரை, திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த பரக்காடு, மணக்கொடி, ரமங்கலம், கூர்கெஞ்சேரி, புறநாட்டுக்கரை, அரிம்பூர் ஆகிய பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போதைய அறிக்கையில் மேலும் சில பகுதிகளும் கடலில் மூழ்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் மத்திய கேரள பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், கேரளாவின் அனைத்து கடற்கரை பகுதிகளும் மூழ்கிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஃபோர்ட் கொச்சி, வரபுழா, முனம்பம், குழிப்பிள்ளி, சேரை, நாயரம்பலம், சேந்தமங்கலம், சேர்த்தலை, குமரகம், தலையோலப்பறம்பு, முகம்மா, கொட்டாஞ்சேரி, தன்னி, புத்தன்வேலிக்கரை, கடமக்குடி, புதுவைபே, உதயனாபுரம், போல்கட்டி, செல்லாணம் பகுதிகள் முழுவதுமாக கடலுக்கு அடியில் செல்லும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஆலப்புழாவின் பெரும்பாலான பகுதிகள், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் நினைத்துப்பார்க்க முடியாத பாதிப்புகள் நிகழும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவும் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் கடுமையாக உயரும் என்றும் எச்சரித்து உள்ளது.
அண்டார்டிக் பனிப்பாறைகளை உருகி வருவதால் இந்திய பெருங்கடலிலின் நீட் மட்டம் 1874 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 1.,06 முதல் 1.75 மிமீ என்ற விகிதத்தில் இருந்த நிலையில், அந்த கடந்த 25 ஆண்டுகளில் 3 மிமீ அதிகமாக உயர்ந்து உள்ளதாக கிளைமேட் செண்டிரல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications