கிரீன் கார்டு வாங்க போன 60 வயது இந்திய பெண் கைது.. 30 ஆண்டு அமெரிக்க வாழ்க்கை நொடியில் முடிந்தது!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்து வருவோரைக் கூட டிரம்ப் நிர்வாகம் திடீரென நாடுகடத்தி வருகிறது. அப்படித் தான் அமெரிக்காவில் சுமார் 30+ ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியப் பெண் ஒருவர் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளார். 1994 முதல் அமெரிக்காவில் வசித்து வரும் அந்தப் பெண் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு கெடுபிடிகள் அதிகமாகி இருப்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறு விதிமீறல்களுக்குக் கூட நாடுகடத்தும் சம்பவங்கள் நடக்கிறது. அப்படிப் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியப் பெண் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

30 ஆண்டுகள்
60 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பப்பில்கித் "பப்பிலி" கவுர், கடந்த 1994 முதலே அமெரிக்காவில் தான் வசித்து வருகிறார். இவர் கிரீன் கார்டு கோரியும் விண்ணப்பித்திருந்தார். வழக்கம் போல நீண்ட தாமதத்திற்குப் பிறகு அது பிரான்ஸ் செய்யப்பட்டது. அவர் தனது கிரீன் கார்டு நேர்காணலின் இறுதிச் சுற்றுக்குச் சென்றிருந்த நிலையில், குடியேற்ற அதிகாரிகள் திடீரென அவரை கைது செய்துள்ளனர்.
தாயார் கிரீன் கார்டு விண்ணப்பத்திற்கான பயோமெட்ரிக் பதிவுக்கு சென்ற போது திடீரெனக் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்ததாக அவரது மகள் ஜோதி கூறினார். பப்பிலி கவுரின் மற்றொரு மகள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். அந்த மகளின் கணவருக்கும் கிரீன் கார்டு ஏற்கனவே கிடைத்துவிட்டது. இந்தச் சூழலில் தான் பப்பிலி கவுர் கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்திருந்தார்.
என்ன நடந்தது
எல்லாமே சரியாகவே போய்க் கொண்டு இருந்ததாம். கடந்த டிசம்பர் 1ம் தேதி பயோமெட்ரிக் ஸ்கேன் செய்யச் சென்றபோது திடீரென அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வழக்கறிஞரிடம் பேச மட்டும் பப்பிலி கவுருக்கு அனுமதி கொடுத்துள்ளனர். இருப்பினும், அவர் எதற்காகக் கைது செய்யப்படுகிறார்.. அவரை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என எந்தவொரு தகவலும் குடும்பத்திற்குத் தெரியப்படுத்தவில்லை.
நீண்ட போராட்டத்திற்கு பிறகே பப்பிலி அடிலாண்டோ சிறைக்கு மாற்றப்பட்டதைக் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். அமெரிக்காவில் விசா பிரச்சினையால் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த அடிலாண்டோ சிறையில் தான் அடைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுர் குடும்பம்
கவுரின் குடும்பத்தினர் 1994ம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் முதலில் லகுனா பீச் என்ற இடத்தில் வசித்து வந்த நிலையில், பிறகு லாங் பீச்சிற்கு குடிபெயர்ந்தனர். கவுருக்கும் அவரது கணவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் 34 வயதான ஜோதி மட்டும் சட்டவிரோதமாகக் குடியேறிய குழந்தைகளுக்கான DACA திட்டத்தின்கீழ் இருக்கிறார். மற்ற இரு குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை இருக்கிறது.
உதவிக்கு வந்த எம்பி
பப்பிலி கவுர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கணவருடன் 'நடராஜ் குவிசின் ஆஃப் இந்தியா அண்ட் நேபாளம்' என்ற உணவகத்தை வந்தனர். அப்பகுதியில் ஓரளவுக்கு நல்ல பிரபலமான உணவகமாக இது இருக்கிறது.. மேலும், கவுர் பெல்மான்ட் ஷோர் ரைட் எய்ட் நிறுவனத்திலும் சுமார் 25 ஆண்டுகள் பணிபுரிந்தார். அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லாங் பீச் எம்பி ராபர்ட் கார்சியா தலையிட்டுள்ளார். கவுரை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ள அவர், சட்ட நடவடிக்கைகளுக்கும் உதவுவதாக உறுதியளித்துள்ளது.
பப்பிலி கவுர் கைது செய்யப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை கைதுக்கான காரணத்தை அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் கூறவில்லை. இதனால் அவரை வெளியே அழைத்து வரும் முயற்சிகள் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications