லீவு இல்லாமல் வேலை.. சம்பளமும் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்த ஓனர்.. தரமான சம்பவம் செய்த ஊழியர்கள்
வாஷிங்டன்: வாரத்தில் 7 நாட்களும் ஊழியர்களை வேலைக்கு வரவழைத்து வேலை வாங்கியதுடன், சம்பளமும் கொடுக்காமல் அமெரிக்காவில் உள்ள ஒரு கடை ஓனர் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார். அவருக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த அதன் ஊழியர்கள் செய்த செயல் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. தொழிலாளர்களுக்கு பணி சுமையை குறைப்பதன் மூலம் வேலைத்திறனை ஊக்குவிக்க முடியும் என்றும் பல்வேறு ஆய்வுகளும் சொல்வதால், பணியிடத்தில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை பல நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

ஏழு நாளும் விடுமுறை இன்றி: ஆனால், இதற்கு மாறாக நிறுவனங்கள் செயல்பட்டால் என்ன ஆகும் என்பதை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்:- அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் மினரல் பாயிண்ட் பகுதியில் ஜெனரல் ஸ்டோர் ஒன்று உள்ளது.
இந்த ஸ்டோரில் ஊழியர்கள் வாரத்திற்கு ஏழு நாளும் விடுமுறை இன்றி பணி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பணிச்சுமை அதிகரித்து இருப்பதால் தவித்த ஊழியர்கள் என்ன செய்யலாம் என்று யோசித்தனர். பணிச்சுமை மட்டும் இன்றி சம்பளமும் கொடுக்கப்படாததால், திடீரென்று அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் மொத்தமாக வேலையை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
6 பேர் பணியாற்றிய நிலயில், அனைவரும் ஒரே நாளில் பணியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் வேறு வழியின்றி ஜெனரல் ஸ்டோர்ஸ் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. பணியில் இருந்து விலகும் முன்பாக வாடிக்கையாளர்களுக்கு தங்கள் நன்றியையை தெரிவித்து ஊழியர்கள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டிச் சென்றனர். இது தொடர்பான படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு நன்றி: கடை வாசலிலே பாதாகை ஒன்றை வைத்து இருந்தனர். அதில், எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நன்றி. நாங்கள் பணியில் இருந்து விலகுகிறோம். உங்களை நாங்கள் மிஸ் செய்கிறோம் என்று எழுதப்பட்ட பதாகையையும் கடையின் வாசலில் கட்டி தொங்க விட்டனர். அதேபோல் மற்றொரு பதாகையில், இந்த ஸ்டோர் மூடப்பட்டது.
போதிய ஊக்குவிப்பு இல்லாததால் நாங்கள் மொத்தமாக விலகுகிறோம். அதிகப்படியான வேலை என்பதோடு ஊதியமும் கொடுக்கப்படவில்லை" என்று எழுதப்பட்டு இருந்தது. தங்களுக்கு ஊதியம் கொடுக்காமல் அதிக வேலை வாங்கிய நிறுவனத்திற்கு தக்க பாடம் புகட்ட நினைத்த ஊழியர்களின் செயல் தற்போது அங்குள்ள சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications