வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீவிரமாக பரவும் போலியோ.. நியூயார்க்கில் அவசர நிலை அறிவிப்பு.. பொதுமக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நியூயார்க் மாகாணத்தில் கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதையடுத்து தடுப்பு மருந்து செலுத்தும் விகிதத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நியூயார்க்கில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

போலியோ அல்லது இளம்பிள்ளை வாதம் எனப்படும் நோயானது கழிவு நீர், அசுத்தமான நீர் வழியாக பரவுகிறது.

மனிதர்களுக்கு இந்நோய் சுகாதார முறையில் இல்லாத தண்னீரை அருந்தும் போது பரவுகிறது. கழிவு நீர், மலம் வழியாகவும் இந்நோய் பரவும்.

ஐ.நா.சபை கூட்டத்தில் இன்று உரை.. நியூயார்க் வந்தார் மோடி.. அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாழ்த்து கோஷம் ஐ.நா.சபை கூட்டத்தில் இன்று உரை.. நியூயார்க் வந்தார் மோடி.. அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாழ்த்து கோஷம்

போலியோ நோய்

போலியோ நோய்

இந்த வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 90 சதவீத பேருக்கு எந்த வித அறிகுறியும் தோன்றுவதில்லை என்றே சொல்லலாம். ஆனால் தீவிரமாக பரவி விட்டால் முடக்கு வாதம் ஏற்படுகிறது. குறிப்பாக நரம்பு மண்டலத்துக்குள் பரவினால் இந்த வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கி பக்கவாதத்தை ஏற்படுத்துக்கிறது. இதனால் இந்த நோய் மிகவும் தீவிரம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கில் அவசர நிலை

நியூயார்க்கில் அவசர நிலை

இந்த நிலையில், அமெரிக்காவின் நீயூயார்க் மாகாணத்தில் உள்ள நாசாவ் கவுண்டி பகுதியில் உள்ள கழிவு நீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் பதறிப்போன அங்குள்ள சுகாதார அதிகாரிகள் போலியோ தடுப்பு மருந்து செலுத்துவதை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்த மாகாணத்தில் மட்டும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அவசர சிலை பிரகடனம் செய்வதற்கான நிறைவேற்று உத்தரவில் கையெழுத்திட்டார்.

எளிதாக இருந்து விடக்கூடாது

எளிதாக இருந்து விடக்கூடாது

இது குறித்து நியூயார்க் மாகாணத்தின் ஆணையர் மேரி பேசட் கூறுகையில், ''போலியோவை பொறுத்தவரை எப்படியும் நடக்கட்டும் என நாம் எளிதாக இருந்து விடக்கூடாது. நீங்களோ.. உங்கள் குழந்தைகளோ... தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அல்லது கை கால்களை முடக்கும் இந்த போலியோ நோய் பாதிக்கும் அபாயம் உண்மையானதாகிவிடும். எனவே, இதுபோன்ற அபாயங்களுக்கு வழி ஏற்படுத்திவிடக்கூடது என்று நாங்கள் நியூயார்க் மக்களை கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

பூஸ்டர் தடுப்பு மருந்து

பூஸ்டர் தடுப்பு மருந்து

அதேபோல், ராக்லண்ட் கவுண்டி, ஆரஞ்ச் கவுனி, சுல்லிவன் கவுண்டி, நசவ் கவுண்டி மற்றும் நியுயார்க் நகரில் உள்ள சுகாதார ஊழியர்கள் அதாவது, போலியோ வைரஸ்கள் உள்ள மாதிரிகளை கையாளக்கூடியவர்கள் அல்லது போலியோ உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கழிவுநீருடன் தொடர்பு ஏற்படும் பணியில் இருப்பவர்களும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A state of emergency has been declared in New York State to encourage vaccination rates after the spread of polio virus was detected in sewage samples in New York State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X