காதலன் கண்களை தோண்டிய காதலி! "இனிமேல் சைட் அடிப்பியா.." அடுத்த நடந்த பகீர்! அதிர்ச்சியில் போலீசார்
வாஷிங்டன்: மற்ற பெண்களை சைட் அடிக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காகத் தனது காதலனின் கண்களைப் பெண் ஒருவர் தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா என்ன தான் சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் கூட, அங்கே நடக்கும் பல சம்பவங்கள் நம்மைச் சிரிக்க வைப்பதாகவும் அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருக்கும்.

இதெல்லாம் ஒரு காரணமா என நாம் யோசிப்போம்.. அதற்கெல்லாம் கூட அமெரிக்கர்கள் சண்டையிடுவார்கள். விமானங்களில் பயணிகளிடம் அல்லது பணிப் பெண்களிடம் நிதானத்தை இழந்த அமெரிக்கர்கள் குறித்த பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.
அமெரிக்கா: அதுபோன்ற ஒரு வினோதமான நிகழ்வு தான் இப்போது அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. ஆனால், இது அனைத்தையும் விட வினோதமான ஒன்றாக இருக்கிறது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவின் மியாமியை பகுதியில் வசித்து வருபவர் 44 வயதான சாண்ட்ரா ஜிமெனெஸ்.. இவரது காதலன் உடன் லிவ் இன் உறவில் இருந்துள்ளார். சுமார் 8 ஆண்டுகளாக இருவரும் இப்படி லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர்.
சாண்ட்ராவின் காதலன் அங்கே மற்ற பெண்களை அவ்வப்போது சைட் அடிப்பாராம். ஆனால், இது சாண்ட்ராவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே பல முறை வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் இந்த விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஆவேசமாகக் கத்தியுள்ளனர்.
சாண்ட்ரா: ஒரு கட்டத்தில் இதனால் ஆத்திரமடைந்த சாண்ட்ரா இது தொடர்பாகத் தனது காதலனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தனது காதலனின் கண்களை வெறி நாய்க்கடி ஊசியைக் கொண்டு சரமாரியாகக் குத்தியுள்ளார். மற்ற பெண்களை சைட் அடித்தார் என்பதற்காகக் காதலனின் கண்களையே இந்த பெண் தோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த நாளில் இருவரும் இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். அப்போது தான் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது காதலனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த அந்த பெண், அங்கிருந்த ஊசியைக் கொண்டு அவரது கண்களைக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த காதலன் அலறிய நிலையில், அந்த பெண் சத்தமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டராம்.
பகீர் சம்பவம்: இதையடுத்து மெல்லத் தட்டுத்தடுமாறி போலீசாருக்கு அந்த நபரே கால் செய்துள்ளார். தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்குப் போட வைத்திருந்த ரேபிஸ் ஊசியை எடுத்து கண்களில் குத்திவிட்டதாக போலீசாருக்கு தெரிவித்துள்ளார். அந்த நபரை மீட்ட போலீசார், உடனடியாக அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சாண்ட்டிராவை தேடிய போலீசார், அவர் அருகில் கார் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருப்பினும், சாண்டிரா தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறார். தனது காதலன் கண்களில் காயம் ஏற்பட அவரே தான் காரணம் என்றும் தான் எதுவும் செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து அவர் இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications