அமெரிக்காவில் முறைகேடு வழக்கு.. இது முதல் தடவை இல்லை! ஓபனாக பேசிய கவுதம் அதானி!
வாஷிங்டன்: அதானி குழுமத்தின் லஞ்சம் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தங்கள் நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முதல் முறையாக கவுதம் அதானி வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதானி குழுமத்தின் லஞ்சம் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் இந்த தகவல்களை மறைத்து அமெரிக்காவில் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடு திரட்டியதாகவும் அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அதானிக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் விளக்க அளிக்க வேண்டும் என்று சம்மனும் அனுப்பியுள்ளது. அதானி நிறுவனம் மீது அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பெரும் புய்லை கிளப்பியுள்ளது. ராகுல் காந்தி அதானியை கைது செய்ய வேண்டும் என்று நேரடியாக அட்டாக் செய்தார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுக்களை அதானி குழுமம் மறுத்தது.
இந்த நிலையில், ஜெய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கவுதம் அதானி, முதல் முறையாக இது தொடர்பாக பேசியுள்ளார். கவுதம் அதானி கூறியதாவது: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்த குற்றச்ச்சாட்டுக்களை உங்களில் பலரும் பார்த்து இருப்பீர்கள். இது போன்ற சவால்களை நாங்கள் சந்திப்பது இது முதல் முறையல்ல. இது போன்ற ஒவ்வொரு தாக்குதல்களும் நம்மை மேலும் வலுவாக்குகிறது என்பதையே நான் உங்களிடம் சொல்ல முடியும். ஒரு தடைகளும் அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கான படிக்கற்கள்தான்" என்றார்.
அதானி நிறுவனம் அமெரிக்காவில் முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் இது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி, அமெரிக்காவின் பங்கு பரிவர்த்தனை ஆணையம் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரூ.16 ஆயிரம் கோடி மதிப்புள்ள சூரிய ஒளி மின்சார திட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அதானி நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிகாரிகளுக்கு 265 கோடி டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.2,200 கோடி) லஞ்சமாக கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்படது.
இந்த புகாரின் அடிப்படையில் அதானி மற்றும் அவரது மருமகனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற குளிஅர் கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. இத்தகைய சூழலில்தான் கவுதம் அதானி தங்கள் நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications