விமானத்தில் ஏகப்பட்ட பாதுகாப்பு குறைபாடு.. புகார் சொன்ன போயிங் ஊழியருக்கு நேர்ந்த கதி தெரியுமா?
வாஷிங்டன்: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல புறப்பட்ட ஏர் இந்தியா Boeing 787-8 Dreamliner விமானம், இன்று பிற்பகல், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் உலக விமானப் பாதுகாப்பு வரலாற்றில் முக்கியமானதாக உள்ளது, ஏனெனில் இது Dreamliner வகை விமானத்தில் முதல் முறையாக பெரிய விபத்து என்று பதிவு செய்யப்படுகிறது.
2011-ல் சேவையில் அறிமுகமானது முதல், Boeing 787 Dreamliner விமானம் உலகம் முழுவதும் பெரும் பயணிகளுடன் பறந்தாலும், இதுவரை எந்த பெரிய விபத்தும் (hull loss/fatal crash) நிகழவில்லை. தொழில்நுட்ப குறைகள், சில சிறிய அவசர நிலைகள் இருந்தாலும், பயணிகள் உயிரிழப்பு அல்லது விமானம் முற்றிலும் சேதமடைந்த சம்பவம் இதுவரை பதிவாகவில்லை. அகமதாபாத் விபத்து தான் Dreamliner வகை விமானத்திற்கு முதல் பெரிய விபத்து.
Dreamliner விமானம் அதிக பாதுகாப்பு மற்றும் redundancy (மூன்று மடங்கு பாதுகாப்பு முறை) கொண்டதாகும். Carbon-fiber கட்டமைப்பு, fly-by-wire system, பெரிய ஜன்னல்கள், அதிக ஈரப்பதம் கொண்ட கேபின், fuel efficiency என பல தொழில்நுட்பங்கள் அதில் உள்ளன. அதேநேரம், இந்த விபத்துக்குப் பின்னணி காரணங்களை விசாரிக்கும் போது, போயிங் 787 விமானங்களின் தரம் குறித்து சமீப காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்பது தெரிய வருகிறது.
போயிங் நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிரான பழிவாங்கல் குறித்து அமெரிக்க காங்கிரஸில் விசாரணை நடைபெற்றது. இதில், 17 ஆண்டுகளாக போயிங்கில் பணியாற்றும் பொறியாளர் சாம் சலெப்பூர், தன்னை அவரது மேலாளர் 40 நிமிடங்கள் தொலைபேசியில் திட்டியதாகவும், தனது கார் டயரில் ஆணி ஊசி வைத்து பழிவாங்கப்பட்டதாகவும் கூறினார்.

2020 முதல் மூன்று ஆண்டுகளாக தயாரிப்பு குறைகள் குறித்து மீண்டும் மீண்டும் மேலாளர்களிடம் புகார் அளித்ததாக சாம் சலெப்பூர் தெரிவித்தார். ஆனால், "மறைத்து வை" என்று சொல்லப்பட்டதாகவும், பின்னர் வேறு பணிக்கு பணியிடம் மாற்றப்பட்டதாகவும் கூறினார். "பாதுகாப்பு குறைகளை சொன்னால் மிரட்டல்களை எதிர்கொள்வது பாதுகாப்பு பண்பாடு அல்ல" என்றும் அவர் அப்போது விமர்சித்தார்
விமான உடல் பகுதிகள் சரியாக இணைக்கப்படவில்லை
போயிங் நிறுவன பொறியாளர் ஒருவர், விமான உடல் பகுதிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும் போது, இடைவெளிகள் முறையாக நிரப்பப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த இடைவெளிகள் போதுமான வலுவில் நிரப்பப்படாமல், அதிக அழுத்தத்தில் பாகங்கள் இணைக்கப்பட்டதால், விமானத்தின் உடல் பலவீனமாகும் அபாயம் உள்ளது. இது நீண்ட காலத்தில் விமானத்தின் உடல் பிளவு மற்றும் பாதிப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமான பாகங்கள் தவறாக பொருத்தப்பட்டுள்ளன
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய குறைபாடுகளில் ஒன்று, சில போயிங் 787 விமானங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாகங்கள் சரியான முறையில் பதியப்படவில்லை என்பது. குறிப்பாக, விமானத்தின் நடுப்பகுதியில் உள்ள பாகங்கள் முறையான அழுத்தத்தில் பொருத்தப்படவில்லை. இதனால் விமானத்தின் நிலைத்தன்மை குறையும் அபாயம் உள்ளது.
குறைபாடான உதிரிப்பாகங்கள்
போயிங் நிறுவனத்திற்கு பாகங்களை வழங்கும் சில வெளிநாட்டு நிறுவனங்கள், தரமற்ற உதிரிப்பாகங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, விமானத்தின் தரை மற்றும் உடல் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்கள் குறைந்த தரத்துடன் தயாரிக்கப்பட்டதாகவும், இது விமானத்தின் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
சப்ளை செயின் மற்றும் தர ஆய்வு குறைபாடுகள்
போயிங் நிறுவனம் உலகளாவிய சப்ளை செயின் முறையில் பல்வேறு பாகங்களை வாங்கி விமானங்களை தயாரிக்கிறது. இந்த முறையில் தர ஆய்வு முறைகள் போதுமானதாக இல்லாததால், சில பாகங்களில் குறைபாடுகள் இருப்பது தெரியாமல் விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
புகார் அளித்த ஊழியர்களுக்கு பழிவாங்கல்
பாதுகாப்பு குறைகள் குறித்து மேலாளர்களிடம் புகார் அளித்த ஊழியர்கள், வேறு பணிக்கு மாற்றப்பட்டதாகவும், அவர்களின் கருத்துகள் முறையாக கவனிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இது நிறுவனத்தின் உள் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ விசாரணைகள்
அமெரிக்க விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இந்த குற்றச்சாட்டுகளை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விமானங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள், போயிங் 787 விமானங்களைப் பயன்படுத்தும் விமான நிறுவனங்களிலும், பயணிகளிலும் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications