உடைந்த “மர்மம்”.. சீனாவில் இருந்தே கொரோனா பரவியது! விசாரணையில் உறுதிபடுத்திய அமெரிக்காவின் எஃப்பிஐ
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் இருந்தே கொரோனா பரவியது என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே உறுதிபடுத்தி இருக்கிறார்.
வாஷிங்டன்: உலகில் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்த கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று சீனாவின் ஊஹான் மாகாணத்தில் இருந்தே பரவியது என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே உறுதிபடுத்தி இருக்கிறார். கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கியதில் இருந்தே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவின் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. அந்த நாட்டில் ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்த அந்த வைரஸ் இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது.
சீனாவில் முதன்முதலில் இந்த கொரோனா வைரஸ் ஊஹான் நகரத்தையே தாக்கியதாகவும், அங்குள்ள ஆய்வுக் கூடம் ஒன்றில் இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தபோது அது வெளியேறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

சீனா வைரஸ்
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தன. சிலர் இதனை சீனா வைரஸ் என்றே அழைக்கத் தொடங்கினர். சீனா அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. விசாரணை அமைப்பு இது தொடர்பான தீவிர விசாரணையில் இறங்கியது.

எஃபி.பி.ஐ. இயக்குநர் விளக்கம்
இந்த நிலையில் சீனாவின் ஊஹானில் உள்ள ஆய்வுக்கூட்டத்தில் கொரோனா வைரஸின் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டது என எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே உறுதிபடுத்தி இருக்கிறார் என எஃப்.பி.ஐ. யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கசிவே காரணம்
இதுகுறித்து எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்து இருப்பதாவது, "இதற்கு எஃப்.பி.ஐ, சற்று நேரம் எடுத்துக்கொண்டது. தற்போது சீனாவில் உள்ள ஊஹான் நகரில் அமைந்து இருக்கும் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவே கொரோனா வைரஸ் வெளி உலகிற்கு பரவி இருப்பதை கண்டுபிடித்து உள்ளோம்.

சீன அரசு மீது குற்றச்சாட்டு
கொரோனா வைரஸின் தோற்றம் ஊஹான் ஆய்வகத்தில் இருந்துதான் தொடங்கியுள்ளது. இங்கு அமெரிக்க அரசு, நமது நட்பு நாடுகளும் மேற்கொண்டு வரும் விசாரணையை தடுக்கவும், மழுங்கடிக்கவும் அரசு தன்னால் இயன்றதை செய்து வருகிறது." என்று தனது 5 பக்க விசாரணை அறிக்கையில் அவர் தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்க அரசுக்கு அழுத்தம்
இந்த விசாரணை அறிக்கையை அமெரிக்க காங்கிரஸ் கோரவில்லை. ஆனால், அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் தங்கள் சொந்த விசாரணையை நடத்துவதாகவும், கூடுதல் தகவல்களை வெளியிடக்கோரி ஜோ பைடன் அரசு மற்றும் அந்நாட்டு உளவுத்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஆற்றல் துறை
எஃப்.பி.ஐயுடன் ஆற்றல் துறையும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதா என்பது குறித்து ஆய்வு செய்யும் விசாரணையில் இணைந்து இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் ஊடகம் குறிப்பிட்டு இருக்கிறது. அந்நாட்டின் ஆற்றல் துறை அதிகளவிலான அறிவியல் நிபுணத்துவம் கொண்டது. அமெரிக்காவில் மேம்பட்ட உயிரியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் இந்த துறை அங்குள்ள தேசிய ஆய்வகங்களை மேற்பார்வையிடும் பணியையும் செய்து வருகிறது.

உலக சுகாதார நிறுவனம்
ஏற்கனவே அமெரிக்கா - சீனா இடையே நீட்டித்த மோதல் போக்கு கொரோனா பரவலுக்கு பின் மேலும் அதிகரித்தது. அமெரிக்க அரசும் அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து சீனா மீது குற்றம்சாட்டி வந்தார்கள். அதேபோல் இந்த ஆய்வில் ஈடுபட வந்த உலக சுகாதார நிறுவனத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது சீனா.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications