Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓமிக்ரான் கொரோனா.. 25% மடங்கு குறையும் வேக்சின் தடுப்பாற்றல்.. பூஸ்டர் டோஸ் தான் தீர்வு.. புது தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் உலகெங்கும் பரவி வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தான் ஓமிக்ரான் பரவலைத் தடுக்கும் முக்கிய ஆயுதம் என பைசர் தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ, இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தற்போது உலகெங்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வைரஸ் பரவியுள்ளது.

இந்த உருமாறிய கொரோனா குறித்த ஆய்வுகளை உலகின் பல்வேறு ஆய்வாளர்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தங்கள் தடுப்பூசி ஓமிக்ரானுக்கு எதிராக எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய பைசர் நிறுவனம் ஆய்வு நடத்துகிறது.

 பூஸ்டர் டோஸ்

பூஸ்டர் டோஸ்

2 டோஸ் வேக்சின் அளிக்கும் ஆன்டிபாடிகளின் செயல்திறன் சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா உடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரானுக்கு எதிராக சுமார் 25 மடங்கு குறைவதாக சைபர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 2 டோஸ் வேக்சினுக்கு பிறகு ஒவ்வொரு கூடுதலாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் தடுப்பாற்றல் அதிகரிக்கவே செய்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர், அதாவது 2 டோஸ் வேக்சின் என்பது ஓமிக்ரானுக்கு எதிராகப் போராட பொதுவான எதிர்ப்பு ஆற்றலைத் தராது என்றும் பூஸ்டர் டோஸ் கட்டாயம் போட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 பைசர் நிறுவனம்

பைசர் நிறுவனம்

இது தொடர்பாக பைசர் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கேல் டோல்ஸ்டன் கூறுகையில், "ஓமிக்ரானுக்கு எதிராகப் போராட 3 டோஸ் வேக்சின் தேவைப்படும். 3ஆம் டோஸ் போடுவதன் மூலம் உடலில் ஆன்டிபாடிகள் அதிகரிக்கும். இது வைரசுக்கு எதிராக சில மாதங்கள் வரை குறைந்தபட்சம் தாக்குப்பிடிக்கும். இந்த இடைவெளியில் நாம் புதிய வேக்சினை தேவைப்பட்டால் உருவாக்கிக் கொள்ள முடியும்" என்றார். இருப்பினும், தற்போது வரை வெளியான ஆய்வுகள் ஓமிக்ரான் ஒப்பீட்டளவில் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.

 25% மடங்கு குறைகிறது

25% மடங்கு குறைகிறது

இருப்பினும், வேக்சின் தடுப்பாற்றால் 25% மடங்கு வரை குறைகிறது என்பது சற்று முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல வேறு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்விலும் வேக்சின் தடுப்பாற்றல் 40% வரை குறையலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. ஏனென்றால், இதை வைத்துப் பார்க்கும் போது, வரும் காலத்தில் புதிய உருமாறிய கொரோனா தோன்றும் போது வேக்சின் தடுப்பாற்றல் மேலும் குறையலாம்,

 ஆண்டுதோறும் வேக்சின்

ஆண்டுதோறும் வேக்சின்

தற்போதைய சூழலில் ஓமிக்ரான் வைரசை கட்டுப்படுத்தத் தனியாக வேக்சின் தேவைப்படுமா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருந்தால், ஆண்டுதோறும் கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளும் சூழலும் ஏற்படலாம். ஆண்டுதோறும் கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
     உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பு

    இருப்பினும், இந்த விஷயத்தில் உலக சுகாதார அமைப்பின் கருத்து வேறு ஒன்றாகவே உள்ளது. அதாவது தற்போதும் கூட உலகில் டெல்டா கொரோனாவின் ஆதிக்கம் தான் இருக்கிறது. எனவே, பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அக்கறை காட்டுவதைக் காட்டிலும், அனைத்து நாடுகளிலும் உள்ளவர்களுக்கும் 2 டோஸ் வேக்சின் போடுவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போது தான் வரும் காலங்களில் ஓமிக்ரான் போன்ற புதிய உருமாறிய கொரோனா ஏற்படுவதைத் தடுக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+