கனமழையால் வெள்ளத்தில் மிதந்த ஸ்பெயின்.. நேரில் பார்க்க சென்ற அரசர் மீது சேற்றை வீசிய மக்கள்
வாஷிங்டன்: கனமழையால் ஸ்பெயின் நாட்டில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட சென்ற அரசர் மீது மக்கள் சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் வெள்ள பாதிப்பால் இதுவரை 213 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்ப நாடுகளில் ஒன்றன ஸ்பெயினில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது கொட்டி தீர்த்த மழையால் கிழக்கு ஸ்பெயினில் பல்வேறு இடங்களும் வெள்ளத்தில் மிதந்தன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், கார்களும், பைக்குகளும் அடித்து செல்லப்பட்டன.

வெள்ள பாதிப்பால் இதுவரை 213 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு வலென்சியா பிராந்தியத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. வீடுகள், தெருக்கள் மற்றும் சாலைகளை மண் மற்றும் குப்பை மூடியுள்ள நிலையில், தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முடங்கியது. அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிர்வாகம் எந்த மீட்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை காண அந்த நாட்டின் அரசர் பிலிப் மற்றும் ராணி லெட்டிசியா சென்றனர். வெள்ள பாதிப்பு கடுமையாக ஏற்பட்ட வேலன்சியா மாகாணத்தில் உள்ள பைபோரட்டா நகரில் பாதிப்புகளை பார்வையிட அரசரும் அவரது மனைவியும் சென்றனர்.
பாதுகாப்பு புடை சூழ அரசரும், அவரது மனைவியும் வருகை தந்த நிலையில், அவர்களது வருகைக்காக சாலைகளில் கிடந்த சேறுகள் மற்றும் தண்ணீர் தேங்கிய பகுதிகள் சீர் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள் அரசர் மற்றும் அவரது மனைவியை பார்த்து எதிர்ப்பு கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த சிலர் அரசர் மீது சேற்றை வாரி வீசினர்.
இதனை சற்றும் எதிர்பாராத அரசர் பிலிப் அதிர்ச்சி அடைந்ததார். பாதுகாவலர்கள் குடைகளை விரித்து சேறு அரசர் மீது படாமல் பாதுகாத்தனர். கெட் அவுட், கெட் அவுட் என பொதுமக்கள் கோஷமிட்டனர். உடன் வந்த ஸ்பெயின் பிரதமரும் இதில் சிக்கிக்கொண்டார். முகத்தில் வீசப்பட்ட சேற்றை துடைத்துக்கொண்டே மக்களை நோக்கி அரசரும் ராணியும் சென்றனர். அப்போது திரும்பி போ.. திரும்பி போ என கோஷம் எழுப்பினர்.
எனினும், இதனை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அரசர் ஆறுதல் கூறினார். சிலர் அரசரின் கைகளை பிடித்துக் கொண்டு தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து தமது பாதுகாவலர்களுடன் அரசர் கிளம்பி சென்றார். ஸ்பெயினின் அரசர் மீதே மக்கள் சேற்றை வாரியிறைத்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications