பாக். பிடுங்கப்படும் அணு ஆயுதம்? அசீம் முனீரின் திமிரால் ஆத்திரம்.. மாஜி பென்டகன் அதிகாரி வார்னிங்
வாஷிங்டன்: பாகிஸ்தானின் கதை முடிவுக்கு வரும் நிலை வந்தால் அணுஆயுதங்களை வீசி உலகின் 50 சதவீதத்தை அழித்துவிடுவோம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அமெரிக்காவில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டுக்கு எதிரான போரில் மண்ணை கவ்விய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அணுஆயுதத்தை கைப்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது அமெரிக்காவின் பென்டகன் மாஜி அதிகாரி மைக்கேல் ரூபின் வார்னிங் செய்துள்ளார்.
நம் நாட்டுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது. நம் நாட்டின் படை வீரர்கள் அடித்த அடியில் மண்டியிட்டது பாகிஸ்தான் ராணுவம்.. எங்களை அடிக்காதீங்க.. நாங்க தாங்க மாட்டோம்.. எங்களை விட்டு விடுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது. இதையடுத்து நம் நாடு விட்டு கொடுத்தது.

ஆனால் போர் நிறுத்தத்துக்கு பிறகு பாகிஸ்தான் அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள் வாய்ச்சவடால் விடுத்து வருகின்றனர். நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகின்றன. அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் டம்பாவில் புலம்பெயர் பாகிஸ்தானியர்கள் மத்தியில் அசீம் முனீர் பேசினார். அப்போது அவர் அணுஆயுத தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்தார். இதுபற்றி அசீம் முனீர், ‛‛சிந்து நதியில் குறுக்கே இந்தியா அணை கட்டினால் அதனை 10 ஏவுகணைகளை வீசி அழிப்போம். ஒருவேளை பாகிஸ்தான் வீழ்த்தப்படுவதாக நாங்கள் நினைத்தால் எங்களுடன் சேர்ந்து உலகின் பதி நாடுகளை அழித்து விடுவோம். ஏனென்றால் பாகிஸ்தான் அணுஆயுத நாடு'' என்று இந்தியா உள்பட 50 சதவீத நாடுகளுக்கு வாய்க்கொழுப்புடன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‛‛ ஒசாம பின்லேடன் போல் அசீம் முனீர் செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பாகிஸ்தானுக்கு அளிக்கும் சலுகைகளை நிறுத்த வேண்டும். இந்த சலுகைகளை பெற அவரது சித்தாந்தம் ஏற்றதாக இல்லை.
பாகிஸ்தானுக்கு பிரச்சனை வந்தால் உலகின் 50 சதவீத நிலப்பரப்பை அணுஆயுதம் கொண்டு அழிப்போம் என்று அவர் மிரட்டி உள்ளார். இந்த மிரட்டல் என்பது பாகிஸ்தான் ஒரு சட்டப்பூர்வ நாடாக இருப்பதற்கான உரிமையை இழந்து விட்டதற்கான அறிகுறியாகும். இதனால் எதிர்காலத்தில் அணுஆயுத தாக்குதலில் இருந்து உலகை காப்பாற்ற பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதனை பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லாவிட்டால் தாங்க முடியாத அளவுக்கு பெரிய அழிவு வரலாம்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
மேலும் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‛‛இந்தியாவின் உரிமையை காக்க பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவு வரவேற்க்கத்தது. இந்தியாவை எந்த காரணம் கொண்டும் உதைக்க முடியாது என்பதை அமெரிக்கா உண்மையிலேயே கற்றுக்கொண்டுள்ளது. இது வரலாற்றில் நினைவுக்கூறப்படும் அத்தியாயமாக இருக்கும்'' என்று புகழ்ந்துள்ளார்.
-
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
அனைத்து ஊழியர்களுக்கும் ஐபோன் 17 Pro Max-ஐ கிப்ட் கொடுத்த சீன நிறுவனம்! இந்தியாவின் நிலைமையை பாருங்க -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications