செயற்கை கருத்தரித்தல்.. 2023 இல் குழந்தை ஆய்வகத்தில்தான் பிறக்கும்.. பாபா வங்கா கணிப்பு
வாஷிங்டன்: 2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்காவின் கணிப்புகளில் செயற்கை கருத்தரிப்பு குறித்த கணிப்பும் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
Ectolife என்ற கருப்பை ஆய்வகத்தை ஹாஷெம் அல்கைலி என்ற ஆய்வாளர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் கருவுறுதலில் சிக்கல் உள்ள தம்பதிகளால் கூட தங்கள் விருப்பம் போல குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள முடியும்.
இந்த ஆய்வகத்தில் எந்தவொரு தொற்று பாதிப்பும் இல்லாமல் கருவை வளர்த்தெடுக்க முடியும். இங்கிருக்கும் செயற்கை பாட்கள் தாயின் கருப்பையில் இருக்கும் அதே சூழலை உருவாக்கித் தரும். ஒரு கட்டத்தில் இப்படி 30ஆயிரம் குழந்தைகளைக் கருப்பை பாட்களில் வளர்க்க முடியும்.

குழந்தைகள்
குழந்தைகள் வளரும் இந்த பாட்களில் இரண்டு முக்கிய குழாய்கள் இருக்கும். தாயின் கருப்பையில் குழந்தைகளைச் சுற்றியுள்ள அம்னோடிக் திரவும் போல ஒரு குழாய் செயல்படும். மற்றொரு குழாய் குழந்தைகளின் கழிவுப் பொருட்களை அகற்றும். 10 மாதங்கள் குழந்தை முழுமையாக வளர்ந்த பிறகு பெற்றோர் விரும்பும் நாளில் நேரத்தில் ஒரு பட்டனை அழுத்தி குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும்.

50 ஆண்டுகால ஆராய்ச்சி
இதுகுறித்து ஹாஷெம் அல்கைலி கூறுகையில் இது உலகமெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் 50 ஆண்டுகால மகத்தான அறிவியல் ஆராாய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இப்போது இது போன்ற பிரசவம் அதிகரிக்கத் தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த செயல்பாட்டில் ஐவிஎஃப் பயன்படுத்தப்படும்.

இதய துடிப்பு
குழந்தையின் இதயத் துடிப்பு, வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜனின் அளவு போன்ற நாடித் துடிப்பை கண்காணிக்க வளர்ச்சி பட்டைகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த குழந்தைகளின் வளர்ச்சியை நேரடி காட்சிகளாக பெற்றோருக்கு இந்த நிறுவனம் வழங்கும். இந்த முறை மூலம் பெண்களுக்கு பிரசவ வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் குழந்தையின் கண்கள், முதல் முடியின் நிறம் வரை அனைத்தையும் வடிவமைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

பாபா வங்கா கணிப்பு
2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கணிப்பில் பெற்றோர்கள் முதலில் தங்கள் குழந்தையின் குணங்களையும் தோற்றத்தையும் தீர்மானிக்க முடியும். இனி வரும் காலங்களில் குழந்தைகள் ஆய்வகத்தில் பிறப்பார்கள் என்று பாபா வங்கா தெரிவித்துள்ளார். உலகின் முதல் செயற்கை கருவூட்டல் முறையான எக்டோலைஃப் நடைமுறைக்கு வந்தால் பாபா வங்காவின் ஆய்வகக் குழந்தை கணிப்பு நிறைவேறும்.

பார்வையற்ற பாபா வங்கா
பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்றவர் பாபா வங்கா. 12 வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக் கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கினார். கடந்த 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு விஷயங்களை முன் கூட்டியே கணித்துள்ளார். அவற்றில் 85 சதவீதம் பலித்துள்ளன. இவர் 1996 ஆம் ஆண்டு முதல் 5079 ஆம் ஆண்டு வரைக்குமான எதிர்காலத்தை கணித்திருக்கிறார். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல், அமெரிக்காவின் 44ஆவது அதிபராக கருப்பினத்தவர் பதவியேற்பார் உள்ளிட்ட கணிப்புகள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பயோ வார் நீளும்
2023 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பயோ வார் நீளும். சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி என்ற சூரிய புயல் வீசக்கூடுமாம். அதே போல சூரியனை விட்டு பூமி விலகினால் பனி யுகத்திலும் அடர்ந்த இருளிலும் மூழ்கக் கூடிய கதி நேரலாம் என்றும் பாபா வங்கா கணித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications