டிக் டாக், விசாட் உள்ளிட்ட செயலிகளுக்கான தடை நீக்கம்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக் டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளங்களை தடை செய்து முனனாள் அதிபர் டிரம்ப் விதித்த உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திரும்ப பெற்றார்.
அதே நேரம் ஜோ படைன், சீன நிறுவனங்களின் செயல்பாடுகளால் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என அமெரிக்க வர்த்தக செயலாளர், தேசிய உளவுத்துறை மற்றும் பிற நிறுவனங்களின் இயக்குனர் ஆகியோருக்கு அறிவுறத்தி உள்ளார்,.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு திறந்த, இயங்கக்கூடிய, நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணையத்தை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது. மனித உரிமைகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பாதுகாப்பதை விரும்பிகிறது. அத்துடன் துடிப்பான, உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தையும் ஆதரிக்கிறது.
சீனாவுடன் பிணைக்கப்பட்ட மென்பொருள் பயன்பாடுகளுடன் தேசிய பாதுகாப்புக்கு அபாயம் உள்ளதா? என்பதை அடையாளம் காணும் நோக்கில் அமெரிக்கா சொந்த மதிப்பாய்வை மேற்கொள்ளும். பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டும் செயலிகள், சீன ராணுவம் அல்லது உளவுத்துறை நடவடிக்கைகளுடன் தொடர்புடையனவா என்பது பற்றிதான் அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.
அமெரிக்கர்களின் மரபணு மற்றும் தனிப்பட்ட சுகாதார தகவல்களை எவ்வாறு பாதுகாப்பு என்பது குறித்து வர்த்தகத்துறை பரிந்துரை வழங்கும். சீனா அல்லது பிற விரோதிகளுடன் இணைக்கப்பட்ட சில மென்பொருள் பயன்பாடுகளின் அபாயங்களை அமெரிக்க வர்த்தகத்துறை நிவர்த்தி செய்யும் " இவ்வாறு அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
