"சீக்ரெட் ரிப்போர்ட்.." அமெரிக்கா கொண்டு வந்த பரபர தீர்மானம்.. கொரோனா எப்படி தோன்றியது தெரியுமா
கொரோனா தோற்றம் பற்றிய சீக்ரெட் ரிப்போர்ட் குறித்த அமெரிக்காவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: கொரோனா தோற்றம் குறித்த அறிக்கைகளைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிபர் விரைவில் முடிவெடுப்பார் என்று தெரிகிறது.
கடந்த 2020இல் உலகெங்கும் பரவ தொடங்கிய கொரோனா அதன் பிறகு இரு ஆண்டுகள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் தலைவலியாக மாறியது. இந்த இரு ஆண்டுகளில் மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.
உலக வல்லரசுகளான அமெரிக்கா தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்துமே கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டன. இதில் இருந்து வெளியே வர நாம் பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வேக்சின் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளால் இரண்டு ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இப்போது தான் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. கொரோனா வைரஸ் வேக்சின் கண்டறியப்பட்டு அதைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலும் கூட கொரோனா தோற்றம் இன்னும் மர்மமாகவே உள்ளது. ஹுபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரின் விலங்கு சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக முதலில் கூறப்பட்டது. அதேநேரம் மற்றொரு தரப்பினர் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற கூறினர்.

சீனா
கடந்த 2019 அக்டோபர்- நவம்பர் காலத்தில், அதாவது கொரோனா பரவல் குறித்து வெளியுலகிற்குத் தெரியும் முன்பே வூஹான் மையத்தில் பணிபுரிந்த சிலருக்கு கொரோனா போன்ற அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா எனப் பல உலக நாடுகள் இதையே கூறின. இந்த விவகாரம் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு அறிக்கைகள் வெளியாகின. மேலும், உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழுவும் நேரடியாகவே சீனா சென்று இது குறித்து ஆய்வு செய்தது. இருந்த போதிலும் இப்போது வரை கொரோனா எப்படிப் பரவியது என்று உறுதியாக யாரும் எதையும் சொல்லவில்லை.

தீர்மானம்
அமெரிக்க உளவுத் துறையிடம் கொரோனா தோற்றம் குறித்து சில ரகசிய அறிக்கைகள் இருந்தன. அந்த அறிக்கைகளைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்கு முழுமையாக ஆதரவு அளித்தனர். இது குறித்துக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 419 வாக்குகள் விழுந்துள்ளன. அதேநேரம் எதிராக எந்தவொரு வாக்கும் பதிவாகவில்லை. இதையடுத்து இந்த தீர்மானம் அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிபர் விரைவில் முடிவெடுப்பார் என்று தெரிகிறது.

உளவு அறிக்கை
இதற்கு ஒப்புதல் தரலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றே அதிபர் பைடன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். வரும் காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்க இந்த கொடிய வைரஸ் எப்படிப் பரவ தொடங்கியது என்பதை அமெரிக்கர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த தீர்மானத்தின் நோக்கமாக உள்ளது. கொரோனா குறித்து அனைத்தையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி எம்பிக்கள்
அந்நாட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறுகையில், "இந்த வைரஸ் எப்படித் தோன்றியது.. இது இயற்கையான நிகழ்வா அல்லது ஆய்வகம் தொடர்பான நிகழ்வால் ஏற்பட்டதா என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்" என்றார். சீனாவின் வுஹான் ஆய்வக் குறித்த உளவுத் துறை ரிப்போர்ட்டை வெளியிடுவது குறித்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வுக்கும் கொரோனா பரவலுக்கும் எதாவது தொடர்புகள் இருக்கிறதா என்பதைக் கண்டறியவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது அது வெளியானால் கொரோனா தோற்றம் குறித்துக் கூடுதல் தகவல் தெரியவரும்.

எப்போது தெரிய வரும்
அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாகவே ஜனநாயக கட்சியினர் ஆதரிக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் குடியரசு கட்சி ஆதரவு அளிக்காது.. ஆனால், இந்த விவகாரத்தில் முதல்முறையாக இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும், சுமார் 10 லட்சம் பேர் உயிரிழக்கக் காரணமாக இந்த கொரோனா வைரஸ் உண்மையான தோற்றம் குறித்து துல்லியமாகத் தெரிய வர பல ஆண்டுகள் ஆகலாம். அல்லது தெரியாமலேயே போகலாம் என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications