மோடி மீது வெறுப்பு இல்லை.. நியாயமாக தேர்தல் நடந்திருந்தால்.. வாஷிங்டனில் ராகுல் காந்தி சொன்ன விஷயம்
வாஷிங்டன்: பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை. அவரது பார்வை வேறு விதமாக உள்ளது. எனது பார்வை வேறு விதமாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலை நான் நியாயமான தேர்தலாக கருதவில்லை. மாறாக அதை ஒரு கட்டுப்படுத்த தேர்தலாகவே கருதுகிறேன் என்று அமெரிக்காவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:- சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம் என்பது மிகப்பெரிய விவகாரமும் அடிப்படை கேள்வியாகவும் உள்ளது. பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை. அவரது பார்வை வேறு விதமாக உள்ளது. எனது பார்வை வேறு விதமாக உள்ளது.
அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவோம். ராகுல் காந்தி நாட்டில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் செய்த சேதத்தை சரி செய்வது கடினமான பிரச்சினை. புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை தாக்குவது உள்ளிட்டவற்றை எதிர்கொள்வது சவாலானது. நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்று இருந்தால் பாஜக 240 தொகுதிகளை நெருங்கியிருக்காது.
அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவோம். தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் விரும்பியதை எல்லாம் செய்தது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் மொத்த பிரசாரமும் கட்டமைக்கப்பட்டது. பிரதமர் மோடி நாடு முழுவதும் தனது பிரசாரத்தை விரும்பிய படி செய்தார்.
அவர்கள்(பாஜக) பலவீனமாக உள்ள மாநிலங்கள் ஒரு விதமாகவும், பலமாக உள்ள மாநிலங்கள் ஒருவிதமாகவும் வடிவமைக்கப்பட்டன. எனவே, அதை நான் நியாயமான தேர்தலாக கருதவில்லை. மாறாக அதை ஒரு கட்டுப்படுத்த தேர்தலாகவே கருதுகிறேன். நாட்டின் அமைப்புகள் கைப்பற்றப்படன. இதை மக்களும் முதலில் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications