"டாலர் ஆட்டம் க்ளோஸ்.. இனி தங்கம் தான் ஒரே வழி!" Rich Dad Poor Dad ஆசிரியர் மிக பெரிய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக பொருளாதாரம் இப்போது மாறி வரும் சூழலில், இது தொடர்பாக ரிச் டாட் புவர் டாட் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி முக்கிய எச்சரிக்கையைக் கொடுத்துள்ளார். அமெரிக்க டாலருக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கூறிய கியோசாகி, இந்த நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே பொதுமக்களைக் காப்பாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் மிக அதிகளவில் விற்பனையான பொருளாதாரப் புத்தகங்களில் ஒன்று ரிச் டாட் புவர் டாட். இந்த புத்தகத்தின் ஆசிரியரும் அமெரிக்க முதலீட்டாளருமான ராபர்ட் கியோசாகி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது அமெரிக்க டாலர் தனது மதிப்பை இழந்து வருவதாகக் கூறிய கியோசாகி, இதனால் கிரிப்டோகரன்சி மற்றும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தினார்.

Bye-Bye US Dollar Robert Kiyosaki Warns of Doomsday Hyperinflation as BRICS Gold-Backed Unit Currency

பிரிக்ஸ் நாடுகள்

பிரிக்ஸ் நாடுகள் புதிய நாணயத்தை அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் பணவீக்கம் வேகமாக உயரலாம் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார். பிரதமர் மோடியைச் சந்தித்தும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நேரத்தில் கியோசாகி கூறியுள்ள இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

டாலருக்கு குட்பை

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பிரிக்ஸ்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை 'யூனிட்' என்ற தங்க ஆதரவுடைய கரன்சியை அறிவிக்கின்றன. அமெரிக்க டாலருக்கு குட்பை! தயாராக இருங்கள்.. விழித்திருங்கள்.! இது தொடர்பாக வரும் தகவல்களைத் தொடர்ந்து கவனியுங்கள். தவறான முடிவை எடுத்து நஷ்டமடையாதீர்கள். இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க டாலரை சேமிப்பவர்கள்தான் பெரும் நஷ்டமடைவார்கள் என்பது என் கணிப்பு.

உங்களிடம் அமெரிக்க டாலர் இருந்தால்.... அதி பணவீக்கம் உங்களை அழித்துவிடும். என்னைப் பொறுத்தவரை தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் ஈத்தர் ஆகியவற்றைச் சொந்தமாக வைத்திருங்கள். விழிப்புடன் இருங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவர் கடந்த சில மாதங்களாகவே தங்கம், வெள்ளி, பிட்காயின் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதே சரியாக இருக்கும் எனச் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

பிரிக்ஸ்

அமெரிக்க டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை உருவாக்க வேண்டும் என நீண்ட காலமாகவே குரல்கள் உள்ளன. பிரிக்ஸ் அமைப்பும் கூட கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இருப்பினும், பிரிக்ஸ் நாடுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் புதிய கரன்சி தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.

கடந்த 2024ல் தான் டாலருக்கு மாற்றாக ஒரு சர்வதேச கரன்சி என்ற பேச்சு உச்சத்தைத் தொட்டது. ஏனென்றால் அந்தாண்டு கசானில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் புதின் "பிரிக்ஸ்" கரன்சியின் மாதிரி போட்டோவை கையில் வைத்திருந்தார். இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிக்ஸ் நாடுகள் டாலரில் இருந்து விலகிச் செல்கிறதோ என்ற பேச்சையும் உருவாக்கியது. அதைத் தொடர்ந்தே தற்போதைய சூழலில் பிரிக்ஸ் கரன்சி உடனடியாக வெளியிடப்படாது என்று ரஷ்ய அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

கரன்சி

தற்போதைய சூழலில் சர்வதேச வர்த்தகங்களுக்கு அமெரிக்க டாலரே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இப்படி அமெரிக்காவையே மீது அதிகமாக நம்பி இருப்பதால் பிரச்சினை வரும் என்பதால் கடந்த காலங்களில் பலமுறை டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை உருவாக்க முயன்று வருகிறார்கள். இருப்பினும், அதில் இதுவரை எந்தவொரு முயற்சிக்கும் வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+