இந்தியா கனடா மோதல் புதுசு கிடையாது.. 1982ல் இந்திரா காந்தி, கனடா பிரதமரிடம் என்ன சொன்னார் தெரியுமா?
வாஷிங்டன்: 2022 இல் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா மற்றும் கனடா இடையே தூதரக அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் காலிஸ்தான் பிரச்சினையின் சமீபத்து மையப் புள்ளியாக மாறியுள்ளது. இரு நாடுகளும் நேற்று தூதர்களை வெளியேற்றி இந்த மோதலை உச்சம் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் இது புதிது கிடையாது. இந்தியா கனடா இடையே 1980கள் முதலே பஞ்சாயத்துதான். சீக்கிர தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்பாகவே காலிஸ்தான் நாடை அமைக்க வலியுறுத்தும் சீக்கிய தீவிரவாத குழுக்களுக்கு கனடா அடைக்கலம் கொடுத்து வந்தது. இந்திரா காந்தியும் இந்த பிரச்சினையை அப்போதே அப்போதைய கனடா பிரதமரிடம் எழுப்பியிருந்தார்.

கொடுமை என்னவென்றால் அப்போது கனடா பிரதமராக இருந்தது, இப்போதைய பிரதமரின் தந்தைதான். அவர் பெயர் பியர் டிரூடோ. அந்த சம்பவம் குறித்த ஒரு ரவுண்ட் அப் இதோ..
காலிஸ்தான் பிரச்சனையின் வேர்கள்:
- பஞ்சாப் பிரச்சனை: 1980களில் இந்தியாவின் பஞ்சாபில் ஏற்பட்ட பிரிவினைவாத இயக்கம் காலிஸ்தான் பிரச்சனைக்கு விதை போட்டது.
- கனடாவுக்கு தப்பிச் செல்லல்: பஞ்சாபிலிருந்து பல பிரிவினைவாதிகள் கனடாவுக்கு தப்பிச் சென்று அங்கு தங்கள் செயல்பாடுகளை தொடர்ந்தனர்.
- கனடாவின் தஞ்சம்: கனடா, அரசியல் தஞ்சம் கோரியவர்களுக்கு தஞ்சம் அளிக்கும் கொள்கை கொண்ட நாடு. அந்த கொள்கை அடிப்படையில் இவர்களுக்கு தஞ்சம் அளித்தது.
வரலாற்றுப் பின்னணி
- 1982: இந்திய பிரதமர் இந்திரா காந்தி, கனடாவில் தஞ்சம் புகுந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்து கனடா பிரதமர் பியர் டிரூடோவிடம் தனது கவலையை தெரிவித்தார்.
- பியர் டிரூடோவின் நிலைப்பாடு: பியர் டிரூடோ, காலிஸ்தான் பிரச்சினையில் கனடாவின் நீண்ட கால கொள்கையைத்தான் தான் பின்தொடர்வதாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
- தல்வீந்தர் சிங் பர்மர்: 1982 இல் பஞ்சாபில் இரு போலீஸ் அதிகாரிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட தல்வீந்தர் சிங் பர்மர் என்பவரை, பியர் டிரூடோ குற்றவாளி என ஏற்க மறுத்துவிட்டார்.
1982 முதல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் போராளிக் குரல்களுக்கு கனடா பாதுகாப்பான புகலிடமாக பலர் கருதுகின்றனர். அந்த ஆண்டு ஜனவரியில், சிங்கப்பூரில் பிறந்து, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் வளர்ந்த சுர்ஜன் சிங் கில், வான்கூவரில் 'புலம் பெயர்ந்த காலிஸ்தான் அரசு' அலுவலகத்தை நிறுவினார். அவர் நீல நிற காலிஸ்தானி பாஸ்போர்ட் மற்றும் வண்ணமயமான கரன்சியை கூட அறிமுகம் செய்தார். இருப்பினும், அவர் உள்ளூர் சீக்கியர்களிடையே போதிய ஆதரவை பெறவில்லை. அதே ஆண்டு, பஞ்சாபில் இரண்டு போலீஸ் அதிகாரிகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட தல்விந்தர் சிங் பர்மாரை ஒப்படைக்க பியர் ட்ரூடோ மறுத்துவிட்டார். இது இந்திரா காந்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
கனேடிய பத்திரிகையாளர் டெர்ரி மிலேவ்ஸ்கி தனது Blood for Blood: Fifty Years of the Global Khalistan Project (2021) என்ற புத்தகத்தில், காலிஸ்தானி விவகாரத்தில் கனடா பிரதமர் அளித்த பதில் பிரதமர் இந்திரா காந்தி உட்பட இந்திய அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமை:
- ஹர்ஜீப் சிங் நிஜ்ஜர் கொலை: கனடா குடிமகனான ஹர்ஜீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட சம்பவம் இந்த பிரச்சனையை மீண்டும் வெடிக்கச் செய்தது.
- இந்திய ஏஜென்சி மீதான குற்றச்சாட்டு: கனடா, இந்திய ஏஜென்சிதான் நிஜ்ஜரை கொன்றதாக குற்றம் சாட்டியது. எங்க நாட்டுக்குள்ளேயே ஆளை அனுப்பி தூக்குறீங்களே என்பது கனடா குமுறல்.
- தூதரக பதற்றங்கள்: இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றதன் மூலம் உறவுகள் மேலும் பதற்றமடைந்தன. இது கனடாவில் தங்கி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஏமாற்றம் என்றபோதிலும், இந்தியா தீவிரவாதத்துக்கு எதிராக இரும்புக் கரத்தை காட்டுகிறது என்று பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications