பெரிய மிஸ்டேக்.. பொய் சொல்லும் ஜஸ்டின் ட்ரூடோ? இந்தியாவுக்கு ஆதரவாக கனடாவை விளாசிய அமெரிக்கா
வாஷிங்டன்: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரிய தவறு செய்துவிட்டார். இந்த தவறை அவரால் திரும்ப பெற முடியாது என அமெரிக்கா பரபரப்பாக தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கனடாவில் இருந்து கொண்டு கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் செயல்பட்டு வந்தார். இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

இதுபற்றி கனடா அரசு விசாரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதாவது ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவின் ஏஜென்சி மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பகமான தகவல்கள் வந்திருப்பதாக கூறினார்.
இதனை இந்தியா உடனடியாக மறுத்தது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை கனடா நிறுத்த வேண்டும் என வார்னிங் கொடுத்தது. அதோடு தற்போது இருநாடுகள் இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. இதனால் இருநாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து இந்தியாவை குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் தான் இந்தியா-கனடா இடையேயான மோதல் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பென்டகர் அதிகாரியான மைக்கேல் ரூபின் தற்போது அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்ட்டியூட் மூத்த உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் தான் மைக்கேல் ரூபினிடம் இந்தியா-கனடா இடையேயான பிரச்சனை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு மைக்கேல் ரூபின் கூறியதாவது:
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மிகப்பெரிய மிஸ்டேக் செய்து விட்டார். ஜஸ்டின் ட்ரூடோ பின்வாங்க முடியாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தற்போது அவர் முன்பு 2 வாய்ப்பு உள்ளது. ஒன்று அவர் கூறிய குற்றச்சாட்டு மூலம் தன்னைத்தானே ஜஸ்டின் ட்ரூடோ சுட்டு கொண்டதை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெளியட வேண்டும். மேலும் தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது ஏன் என ஜஸ்டின் ட்ரூடோ விளக்க வேண்டும்.

அதோடு இந்த விஷயத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். ஒசாமா பின்லேடன் ஒரு கட்டுமான என்ஜினீயர். ஆனால் அவர் பல தாக்குதல்களை நடத்தினார். இதனால் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வெறுமனே பிளம்பர் என்பதை மட்டுமே கூறிவிட முடியாது. மேலும் ஜஸ்டின் ட்ரூடோவின் நிலைப்பாட்டில் கனடாவின் நட்பு நாடுகள் ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்பது பற்றிய கவலையின்றி அவர் உள்ளார்.
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி இஸ்தான்புல்லில் கொல்லப்பட்டபோது துருக்கி உளவுத்துறை முக்கிய தகவலை வெளியிட்டது. இது தான் சவூதி அரேபியாவுக்கு எதிராக திரும்பியது. ஆனால் ஜஸ்டின் ட்ரூடோவால் எந்த ஆதாரங்களையும் வெளியிட முடியவில்லை. என்னை நம்புங்கள்.. என்னை நம்புங்கள் என கூறுகிறார். இதனால் அவரை யாராலும் நம்ப முடியாது'' என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications