சுத்துப்போட்ட கனடா.. அமெரிக்காவுக்கு மேலும் அதிக வரி விதிப்பு! சிக்கலில் டிரம்ப்
வாஷிங்டன்: பக்கத்து நாடு என்று கூட பாராமல் கனடாவுக்கு அமெரிக்கா வரியை போட்டிருந்தது. இந்த வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது கனடா பதில் வரியை போட்டிருக்கிறது.
இதனால் அமெரிக்க ஆட்டோமொபைல் துறை கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே வரி தொடர்பாக அச்சுறுத்தி வந்த டிரம்ப், பக்கத்து நாடான கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியை விதிப்பதாக அறிவித்தார். இந்தியா, சீனா, ஜப்பான் என ஏறத்தாழ எல்லா நாடுகளுக்கும் அவர் வரியை போட்டிருந்தாலும் கூட, பக்கத்து நாடான கனடாவுக்கு எப்படிங்க வரியை போடலாம் என்று கண்டன குரல்கள் எழுந்தன. காரணம் பல விஷயங்களில் கனடா இல்லையெனில் அமெரிக்கா திக்குமுக்காடிவிடும்.
எரிசக்தி (Energy) - 50%
மரப்பணிகள் (Lumber) - 80%
அலுமினியம் (Aluminum) - 50%-60%
இரும்பு/ஸ்டீல் (Steel) - 15%-20%
அரிய கனிமங்கள் (Critical Minerals) - 10%-25%
வாகன உதிரிப்பாகங்கள் - 25%-30%
மொத்த இறக்குமதி பங்கு - 14%
என பல துறைகளில் கனடாவை அமெரிக்கா ரொம்ப நம்பியிருக்கிறது. இருந்தாலும் கூட வரி விஷயத்தில் கனடாவை அமெரிக்கா கடித்து வைத்திருக்கிறது. கனடாவும் பதிலுக்கு வரியை அறிவித்திருக்கிறது. இந்த பதிலடி வரிதான் சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதாவது இன்று அதிகாலை 12.01 முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு CUSMA விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கனடா தெரிவித்திருக்கிறது. இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் CUSMA என்றால் என்ன? என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
CUSMA ஒப்பந்தம் என்பது கடந்த 2018ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2019ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்த மூன்று நாடுகளுக்கிடையிலான ஒரு வர்த்தக ஒப்பந்த நடைமுறையாகும். கனாடா-அமெரிக்கா-மெக்சிகோ என இந்த 3 நாடுகளுக்கு இடையேதான் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும். அதாவது கார் ஒன்று உற்பத்தியாகிறது எனில் அதற்கான உதிரி பாகங்கள் 75% இந்த மூன்று நாடுகளிலிருந்து வந்திருக்க வேண்டும். இப்படி உருவாக்கப்படும் கார்களுக்கு வரி சலுகை உண்டு.
சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து பாகங்கள் கொண்டு வந்தால் சலுகை வழங்கப்படாது. அமெரிக்கா இதைத்தான் செய்கிறது. சீனாவிலிருந்து குறைந்த விலையில் உதிரி பாகங்களை வாங்கி அதை, அமெரிக்காவில் வைத்து அசெம்பிள் செய்து விற்று வருகிறது. இப்படியான பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். "இந்த வர்த்தகப் போருக்கு காரணம் டிரம்ப்தான். நாங்கள் எதிர்வினை ஆற்றுகிறோம். அவ்வளவுதான்" என்று கார்னி கூறியுள்ளார்.
கனடாவின் இந்த அறிவிப்பால், அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் கனடாவில் போனி ஆகாது. எனவே அமெரிக்காவில் தொழில் நஷ்டமடையும். வேலைவாய்ப்புகள் குறையும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் துரத்தப்படுவார்கள். பெரிய பொருளாதார பிரச்சனையாக இது மாறும்.
வாகன ஏற்றுமதி துறையை எடுத்துக்கொண்டால் கடந்த 2024-ல், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு $35.6 பில்லியன் அளவுக்கு வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இந்த 25% காரணமாக இது அப்படியே சரிவை சந்திக்கும். இந்த பதிலடியை டிரம்ப் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications