சிறைக்குள் கஞ்சா கடத்திய பூனை.. கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்! சினிமாவில் கூட நடக்காத சம்பவம்
கோஸ்டா ரிகா: சினிமாவில் கூட காட்டப்படாத சீனாக, கோஸ்டா ரிகா நாட்டில் பூனை ஒன்று போதைப்பொருள் கடத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பூனை கடத்தி சென்ற 236 கிராம் கஞ்சா, 68 கிராம் ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பூனை போதைப்பொருள் கடத்தி சென்ற வீடியோவை அந்த நாடு இணையத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
சிறைச்சாலைக்குள் போதை பொருள் புழக்கம் என்பது உலக அளவில் உள்ள பிரச்சினையாக உள்ளது. பல சினிமாக்களில் கூட சிறைக்குள் போதைப்பொருளை எப்படியெல்லாம் கடத்தி செல்கிறார்கள் என்பது பற்றி பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். சினிமாவில் காட்டுவதை எல்லம் தாண்டியும் கூட சில கடத்தல் சம்பவங்கள் நடக்கும் என்பதுதான் பலரும் சொல்லும் கருத்தாக உள்ளது.

போதைப் பொருள் கடத்திய பூனை
என்னதான் சிறைக்குள் கடுமையான கெடுபிடிகள் காட்டப்பட்டாலும், சிறைக்கைதிகள் ஏதாவது ஒரு வழியில் போதைப் பொருளை எடுத்து செல்வதை தடுக்க முடிவில் முழுமையாக வெற்றி அடைய முடியவில்லை என்பதே பொதுவாக சர்வதேச அளவிலும் சிறை அதிகாரிகள் சொல்லும் கருத்தாக உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நிருபிக்கும் வகையில் கோஸ்டா ரிகா நாட்டில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது, சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல் பணியில் கருப்பு - வெள்ளை நிறத்திலான பூனை ஒன்று ஈடுபட்டுள்ளது. இதை படிக்கும் போதே புருவத்தை உயர்த்துவதை பார்ப்பது தெரிகிறது. உண்மைதாங்க.. பூனைதான் கடத்தலில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு:- ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டா ரிக்காவில் உள்ள சிறை அருகே பூனை ஒன்று நடமாடியது. சிறிது நேரத்தில் சிறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலியில் ஏற அந்த பூனை முயன்றது.
236 கிராம் கஞ்சா, 68 கிராம் ஹெராயின்
இதைக்கவனித்த போலீசார், பூனையின் உடம்பில் வழக்கத்திற்கு மாறாக ஏதோ இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே பூனையை பிடித்து சோதனை செய்ததில், பூனையின் உடல் நிறத்தில், மேலே ஒரு ஸ்டிக்கர் ஒட்டி, அதற்குள் கஞ்சா, கோக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் இருந்தது. இதனை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர். 236 கிராம் கஞ்சா, 68 கிராம் ஹெராயின் மற்றும் ரோலிங் பேப்பர் ஆகியவை பூனையின் முதுகில் ஒட்டி வைக்கப்பட்டு இருந்து.
பூனையின் நிறத்தை அப்படியே பிரதிபலிக்கும் வண்ணத்தில் உடலின் மேற்பரப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அதற்குள் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்து போலீசார் மீட்டுள்ளனர். கோஸ்ட ரிக்கா நாட்டின் நீதித்துறை அமைச்சகம் இந்த வீடியோவை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது. அதில், போகோசி சிறைச்சாலையில் இரண்டு டிரக் பேக்கேஜ்களுடன் சுற்றி திரிந்த பூனையை சிறை போலீசார் பிடித்துள்ளனர்.
நெட்டிசன்கள் கருத்து
பூனையானது தேசிய சுகாதார சேவைகள் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் உடல் நிலை கண்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது. பூனையை பழக்கப்படுத்தி இத்தகைய செயலில் ஈடுபட வைக்கப்பட்டதா? யார் இதை செய்தனர்? என்று விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். பூனையை கூட விட்டு வைக்காமல் போதை பொருள் கடத்தலுக்கு கும்பல்கள் ஈடுபடுத்தியது சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பூனை உடலில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இப்படியெல்லாம் யோசிக்க முடியுதா? என நினைக்கும் வகையில், கடத்தல் பேர்வழிகளின் செயல்பாடுகள் அமைந்து இருப்பதை காட்டுகிறது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். சில நெட்டிசன்களோ, பூனையை ஏன் இப்டி பயன்படுத்துகிறார்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications