சைலெண்டாக அணு குண்டு சோதனை செய்யும் பாகிஸ்தான், சீனா.. டிரம்ப் பகீர்.. இந்தியாவுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ச்சியாக அணு ஆயுதங்களைச் சோதிப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார். இதனால் அமெரிக்காவும் அணு ஆயுதச் சோதனைகளை நடத்துவதே சரியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் என இரண்டுமே அணு ஆயுதச் சோதனை நடத்துவதாக டிரம்ப் சொல்லியுள்ளது கவனத்தை ஈர்ப்பதாகவே அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது. அந்தச் சந்திப்பிற்குச் சற்று நேரத்திற்கு முன்பு, டிரம்ப் தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது அமெரிக்கா இனி அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொள்ளும் என அறிவித்தார். இது அப்போதே உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பியது.

அணு ஆயுதச் சோதனை
இதற்கிடையே அணு ஆயுதச் சோதனை தொடர்பாக இப்போது டிரம்ப் கூறியுள்ள கருத்துகள் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரஷ்யா, சீனா, வட கொரியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பல நாடுகள் அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்துவதால் அமெரிக்காவும் அதைச் செய்வதே சரியாக இருக்கும் என டிரம்ப் குறிப்பிட்டார். இது ஒரு அத்தியாவசியமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான், சீனா
இது தொடர்பாகப் பிரபல அமெரிக்க ஊடகத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், "ரஷ்யாவும் சீனாவும் சோதனைகளை நடத்துகின்றன, ஆனால் அவை அதைப் பற்றிப் பேசுவதில்லை. நாம் அவர்களில் இருந்து வித்தியாசமானவர்கள். வெளிப்படைத்தன்மையை நம்புகிறோம்.. எனவே, நாம் அதை அறிவிப்போம். நாம் முறையாக அறிவிக்கவில்லை என்றாலும் நமது செய்தி நிறுவனங்கள் இதைச் செய்தியாக வெளியிடும். சீனா, ரஷ்யா நாடுகளில் அரசுக்கு அப்படிச் செய்தி நிறுவனங்கள் எதுவும் இல்லை.
அவர்கள் சோதனை செய்வதால் நாமும் சோதனை செய்வோம். அவர்கள் மட்டுமில்லை.. வட கொரியா கூட தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. பாகிஸ்தானும் இப்படித் தான் சோதனை செய்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார். இந்த நாடுகள் எங்கே தங்கள் அணு ஆயுதங்களைச் சோதனை செய்கிறது என்பது அமெரிக்காவுக்குத் தெரியாது என்ற போதிலும் அவர்கள் தொடர்ந்து சோதனைகள் நடத்தி வருவது உண்மை தான் என்றும் தெரிவித்தார்
பூமிக்கு அடியில் சோதனை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் பூமிக்கு அடியில் சோதனை செய்யலாம்.. அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் சரியாகத் தெரியாது. நாம் அதிகபட்சம் ஒரு சிறிய அதிர்வை உணர்வோம். சுருக்கமாகச் சொல்கிறேன்.. அவர்கள் தொடர்ந்து சோதனை செய்கிறார்கள்.. நாம் சோதனை செய்யாமல் இருக்கிறோம். இந்த நிலையை மாற்ற வேண்டும்" என்றார்.
உலகின் வேறு எந்த நாடுகளையும் விட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்த அவர், அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் மூலம் உலகையே 150 முறை வெடிக்க வைக்க முடியும் என்றார். மேலும் அவர், "ரஷ்யாவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவிடம் கூட கணிசமான எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தபோது அணு ஆயுதக் குறைப்பு குறித்தும் கூட விவாதித்தேன்" என்றார்.
முக்கிய விளக்கம்
அணு ஆயுதச் சோதனை தொடர்பாக டிரம்ப் கூறிய கருத்துகள் தெளிவில்லாமல் இருந்தது. அதாவது அணு ஆயுதங்களை அமெரிக்கா வெடிக்க வைத்து சோதனை நடத்துமா.. இல்லை அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் ஏவுகணைகளைச் சோதிக்கவுள்ளதா என்பதில் குழப்பம் இருந்தது. ஏனென்றால் 21ம் நூற்றாண்டு ஆரம்பித்த பிறகு வடகொரியாவைத் தவிர வேறு எந்தவொரு நாடும் அணு ஆயுதத்தை வெடிக்க வைத்து சோதனை நடத்தியதே இல்லை. இது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் அமெரிக்கா இப்போது அணு குண்டுகளை வெடிக்க வைத்து சோதனை எதுவும் நடத்தாது எனத் தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாம் சிஸ்டம் சோதனைகளைத் தான் நடத்தப் போகிறோம்.. அவை அணு குண்டு வெடிப்புகள் இல்லை. இதை நாம் அணுசக்தி அல்லாத வெடிப்புகள் என்று குறிப்பிடலாம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு சிக்கல்?
சீனாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைச் சோதித்து வருவதாக டிரம்ப் சொல்லியுள்ளது கவனம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு சூழலை மேலும் சிக்கலாகலாம். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கிறது. மேலும், 1998க்கு இந்தியா எந்தவொரு அணு ஆயுதச் சோதனையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025 நிலவரப்படி, இந்தியாவிடம் சுமார் 180 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.. பாகிஸ்தானிடமும் கிட்டத்தட்ட (170 அணு ஆயுதங்கள்) இதே அளவு அணு ஆயுதங்கள் மட்டுமே இருக்கும் எனத் தெரிகிறது. அதேநேரம் சீனாவிடம் இப்போது சுமார் 600 அணு ஆயுதங்கள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
-
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications