டிரம்ப் பிரஷருக்கு அடிபணிந்த சீனா.. இனி எதுவும் செய்ய முடியாது! எல்லாம் இப்படி மொத்தமாக மாறிடுச்சே
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான வர்த்தக மோதல் நிலவி வந்தது. அமெரிக்காவுக்கும் அதன் அதிபர் டிரம்பிற்கும் சீனா தக்கப் பதிலடி கொடுக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் அமெரிக்காவிடம் சீனா சரணடைந்துவிட்டது. டிக்டாக்கை மொத்தமாக அமெரிக்காவுக்குக் கொடுக்க சீனா ஒப்புக்கொண்டு இருக்கிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் அதிபரானது முதலே உலக நாடுகளுடன் மோதல் போக்கை கொண்டிருக்கிறார். இந்தியா உட்பட உலகின் எல்லா நாடுகள் மீதும் டிரம்ப் வரி விதித்தார். சீனா உடன் கூட டிரம்ப் அதுபோல தான் வரி விதித்திருந்தார். இருப்பினும், அதன் பிறகு சில காரணங்களைச் சொல்லி அந்த வரி உத்தரவை நிறுத்தி வைத்திருந்தார்.

சீனா
இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. சீனாவும் கூட தனது அரிய வகை கனிமம், அதாவது ரேர் எர்த் மெடல் கனிமங்களை ஏற்றுமதி செய்வதில் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. சீனா இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றே பலரும் நினைத்தனர்.
ஏனென்றால் டிரம்ப் முதல்முறை (2016- 2020) அதிபராக இருந்த காலகட்டத்திலும் இதுபோலத் தான் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக மோதல் நிலவியது. இரு தரப்பும் அப்போது மாறி மாறி வரிகளைப் போட்டுக் கொண்டன. இருப்பினும், சீனா கடைசி வரை தனது வரியை வாபஸ் பெறவே இல்லை. இதனால் அதேபோல இந்த முறையும் அமெரிக்காவுக்குச் சீனா தக்கப் பதிலடியைக் கொடுக்கும் என்றே பலரும் நினைத்தனர்.
டிக்டாக் விற்பனை
ஆனால், எதிர்பாராத ட்விஸ்ட்டாக சீனாவின் டிக்டாக் செயலியை அமெரிக்க முதலீட்டாளர்களுக்குச் சீனா விற்றுள்ளது. இது தொடர்பான முக்கிய நிர்வாக ஒப்பந்தத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். டிக்டாக் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வரும் என்றும் இதன் மூலம் தேசியப் பாதுகாப்புக் கவலைகளைத் தீர்க்கப்படும் என்றும் அந்த நிர்வாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புக்கொண்ட சீனா
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டார்கள் என டிரம்ப் கூறினார். டிக்டாக் விவகாரத்தில் இனி வரும் முடிவுகள் சரியாகவே இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "எந்தவொரு வெளிநாட்டு அரசாலும் இது (டிக்டாக்) ஒரு பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இது நியாயமாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
புதிய ஓனர் யார்
அதன்படி டிக்டாக் ஒரு புதிய அமெரிக்கக் கூட்டு நிறுவனமாக மாற்றப்படும். அதாவது அமெரிக்க முதலீட்டாளர்கள் இருக்கும் நிறுவனத்தின் வசம் டிக்டாக் வரும். ஆரக்கிள் மற்றும் சில்வர் லேக் உள்ளிட்ட அமெரிக்க முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் சுமார் 80 சதவீத பங்குகளை வைத்திருப்பார்கள். சீனாவின் பைட் டான்ஸ் வெறும் 20 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான பங்குகளை வைத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிக்டாக் அமெரிக்கப் பிரிவின் நிர்வாகமும் அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். டிக்டாக் போர்ட்டிலும் பைட் டான்ஸுக்கு ஒரு இடம் மட்டுமே இருக்கும்.
அடிபணிந்த சீனா
அமெரிக்காவில் 170 மில்லியன் டிக்டாக் பயனர்கள் உள்ளனர். அங்கு யூடியூப்பிற்கு இணையாக டிக்டாக்கிலும் யூசர்கள் உள்ளன. பலருக்கும் டிக்டாக் ஒரு முக்கிய வருமானமாகவும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது டிக்டாக்கிற்கு முழுமையாகத் தடை விதிப்பது அமெரிக்கர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே முடியும். ஆனால், சீன செயலி அமெரிக்காவில் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே டிக்டாக்கை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு விற்க வேண்டும் என டிரம்ப் அழுத்தம் கொடுத்தார். அதற்குச் சீனா அடிபணிந்துவிட்டது.












Click it and Unblock the Notifications