வானிலையில் வரும் மாற்றம்..உலகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: ஐ.நா. வானிலை ஆய்வு மையம் அலர்ட்
வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடல் பகுதியில் வரும் மாதத்தில் எல்-நினோ நீரோட்டம் உருவாக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. எல்-நினோ நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஜூலை மாத இறுதியிலேயே எல்-நினோ உருவாக 60% வாய்ப்பு உள்ளதாகவும், ஜூலை தவறினால் செப்டம்பர் இறுதியில் எல்-நினோ உருவாக 80% வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி ஏப்ரல் 11ஆம் தேதியன்று எல் நினோ நிகழ்தகவு 50% என்று நிர்ணயித்தது. பருவமழையை சீர்குலைக்கும் வானிலை முறை, கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலின் வெப்பமயமாதலால் தூண்டப்படுகிறது, இது உலகம் முழுவதும் காலநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது மற்றும் பெரும்பாலும் இந்தியாவில் வறட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் சீசனில் எல் நினோவின் 70% நிகழ்தகவு இருப்பதாகவும், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் பருவத்தில் 80% ஆக உயரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த மாதம் கூறியது.

எல் நினோ என்றால் ஸ்பானிய மொழியில் குட்டிப் பையன் என்று பொருள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படுவது ஏறக்குறைய உறுதியான நிலையில், மத்திய விவசாய அமைச்சகமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் அதை எதிர்கொள்ள தயாராவதற்கான கூட்டங்களை நடத்தி வருகின்றன. 2001ஆம் ஆண்டு முதல் 2020 க்கு இடையில், இந்தியா ஏழு எல் நினோ ஆண்டுகளைக் கண்டுள்ளது.
வரும் ஜூலை மாத இறுதியிலேயே எல்-நினோ உருவாக 60% வாய்ப்பு உள்ளதாகவும், ஜூலை தவறினால் செப்டம்பர் இறுதியில் எல்-நினோ உருவாக 80% வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. எல் நினோ நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications