பீட்சா வாங்க சென்ற சிறுமிகள் மாயம்! 50 ஆண்டுக்கு பின் கிடைத்த அந்த ஆதாரம்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தீர்க்கப்படாமல் இருந்த ஒரு குற்றச் சம்பவத்தில், இப்போது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த விசாரணையில் குற்றவாளி எப்படிச் சிக்கினார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 1975ம் ஆண்டு மேரிலாந்து மாகாணத்தில் வசிக்கும் கேத்தரின் (11) மற்றும் ஷீலா லியோன் (13) வயதான இரண்டு சிறுமிகள் அருகே உள்ள கடையில் பீட்சா வாங்கச் சென்றுள்ளனர். அது வழக்கமாகச் செல்லும் கடை என்பதால் அவர்களின் தாயாரும் விட்டுவிட்டார்.

america crime world

ஆனால், பீட்சா வாங்கச் சென்ற அந்த சிறுமிகள் பல மணி நேரம் ஆகியும் திரும்பவே இல்லை. இதையடுத்து அந்த சிறுமிகளின் தயார் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மாயம்: உடனடியாக அந்த சிறுமிகளைக் கண்டுபிடிக்க மிகப் பெரிய தேடுதல் வேட்டையை போலீசார் நடத்தினர். சிறுமிகளின் பெற்றோர் மந்திரவாதியின் உதவிகளைக் கூட நாடினர். இருப்பினும், அந்த சிறுமிகளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. போலீசார் விசாரணையில் சிறுமிகளுடன் அப்போது அவர்களின் நண்பர் ஒருவர் வந்தது தெரிய வந்தது. அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில், வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது, ஒரு இளைஞர் தங்களிடம் வந்து பேசியதாகவும் உரையாடல்களை டேப் ரெக்கார்ட்டில் பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த அக்கம் பக்கத்தினர், அந்த சிறுவனிடம் இருந்து தகவல்களைப் பெற்று அந்த குற்றவாளியின் படத்தை வரைந்துள்ளனர். இருப்பினும், அந்த நபரை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. சுமார் 42 ஆண்டுகளாக அந்த சிறுமிகளுக்கு என்ன ஆனது.. அவர்கள் உயிருடன் உள்ளனரா என்பது கூட தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையே சுமார் 4 தலைமுறைக்குப் பிறகு கடந்த 2013ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றவாளியை போலீசார் பிடித்தர்.

அந்த இளைஞர்: அதாவது கடந்த 2013ல் போலீசார் இந்த சகோதரிகள் மாயமான கேஸ் தொடர்பான டாக்குமெண்டுகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது குற்றம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு, போலீசார் இளைஞர் ஒருவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த இளைஞர் அளித்த பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே இருந்துள்ளது. இருப்பினும், அந்த இளைஞர் உண்மையைக் கண்டறியும் சோதனைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் அந்த சோதனையில் தோல்வி அடைந்த போதிலும், அவருக்கு இந்த குற்றத்தில் தொடர்பு இருக்காது என்று எண்ணி போலீசார் அந்த இளைஞரை விட்டுவிட்டனர்.

அந்த டாக்குமெண்டுகளை 2013ல் ஆய்வு செய்த போது தான் இந்த இளைஞரின் படமும் சிறுவன் சொன்ன அந்த டேப் ரெக்கார்ட் மனிதனின் படமும் கிட்டதட்ட ஒரே போல இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். லாயிட் லீ வெல்ச் என்ற அந்த நபர் ஏற்கனவே 1998ல் 10 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் 33 ஆண்டுகள் சிறையில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

குற்றவாளி: மேலும் அந்த நபர் 1973 முதல் 1997 வரை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபராக இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இருப்பினும், ஒரு கட்டடத்தில் அவர் அப்பகுதியில் உள்ள தனது மாமாவின் வீட்டில் உள்ள பேஸ்பெண்டிற்கு அந்த சிறுமிகளைக் கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டார். மேலும், சிறுமிகளில் ஒருவரைப் பலாத்காரம் செய்ததாகவும் அதன் பிறகு சிறுமியைக் கொன்றதாகவும் கூறியிருக்கிறார்.

போலீசார் அவர் சொன்ன இல்லத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அங்கிருந்த லாயிட்டின் உறவினர் பார்கர் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அப்போது நடந்த சில சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அதாவது அப்போது இரு பேக்குகளை எடுத்துக் கொண்டு லாயிட் லீ வெல்ச் வந்ததாகவும் அதில் இருந்து மிக மோசமான நாற்றம் வந்ததாகவும் குறிப்பிட்டார். அது குறித்துக் கேட்ட போது கெட்டுப்போன இறைச்சி இருப்பதாக லாயிட் லீ வெல்ச் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

ஆதாரம்: அந்த பையில் இருந்ததை அங்கு வீட்டிலேயே லாயிட் லீ வெல்ச் எரித்துவிட்டதாகவும் பார்கர் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2015ல் அந்த இல்லத்தில் எல்லா இடங்களிலும் போலீசார் சோதனை செய்தனர். அதில் ரத்தத்தின் சிறு துளிகள், மனித எலும்பின் சிறிய சிதைந்த துண்டுகள், ஒரு பல், சகோதரிகள் அணிந்திருந்த நெக்லஸ் மற்றும் கண்ணாடியின் துகள்களைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் மீண்டும் வழக்கை ஓபன் செய்து லாயிட் லீ வெல்ச் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் இரு சிறுமிகளைக் கொலை செய்தது உறுதியான நிலையில், அவருக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே 10 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் இருந்த லாயிட், 2026க்கு பிறகு இந்த வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவிக்கப் போகிறார்.

ட்விஸ்ட்: அதேநேரம் சிறுமியின் சடலங்களை எரிந்த லாயிட், எச்சங்களை அங்கேயே புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து அங்கு போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் புதிய ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இது என்ன ஆதாரம் என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்ற போதிலும் லாயிட் குற்றத்தை உறுதி செய்வதாகவே அது இருக்கும் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+