கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 80 பேரின் கதி என்ன?
வாஷிங்டன்: கொலம்பியாவில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அந்த விமானத்தி பயணித்த 80 பேரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கொலம்பியா பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
இன்று ஏற்பட்ட ராணுவ விமான விபத்தில் சுமார் 80 படைவீரர்கள் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் 80 பேருடன் சென்ற ரணுவ விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. சி130 ஹெர்குலஸ் ரக விமானத்தில், 80 ராணுவ வீரர்கள் பயணீத்துள்ளனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது.
கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூரெட்டா லெகிசமோ என்ற நகரில் இருந்து விமானம் புறப்பட்டுள்ளது. ஈகுவடாரை ஒட்டி அமைந்துள்ள இந்த நகரத்தில் இருந்து விமானம் புறப்பட்டதில் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் விழுந்துள்ளது விமானம் விழுந்த இடத்தில் கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 80 வீரர்களும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த வகை விமானம் பொதுவாக சுமார் 100 படைவீரர்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இராணுவப்படைகள் ஏற்கனவே சம்பவ இடத்துக்கு சென்றுள்ளன. ஆனால், உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கையும், விபத்தின் காரணமும் இன்னும் உறுதியாகவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கொலம்பியா பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications