கொரோனா மருந்தால் 17,000 பேர் உயிரிழப்பு? வெளியான பகீர் தகவல்! குழம்பி நிற்கும் ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா முதலில் பரவ தொடங்கிய போது அதன் சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலகின் எந்தவொரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை.

 Corona virus Recommended medicine Hydroxychloroquine May Caused 17,000 Deaths

கொரோனா வேக்சின் தொடங்கி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னரே இப்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட மருந்து குறித்து சில பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்: அப்படி கொரோனா காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளில் ஒன்றுதான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின். கொரோனா உச்சத்தில் இருந்த போது, அதற்கான தடுப்பூசியும் அப்போது கண்டுபிடிக்காத நிலையில், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதற்கிடையே இந்த சுமார் 17,000 பேர் உயிரிழப்புகளுக்கும் இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் இது குறித்த ஆய்வை நடத்தியிருந்தனர். கொரோனா முதல் அலை சமயத்தில் மார்ச் முதல் ஜூலை 2020 வரை பல உலக நாடுகளில் தீவிர பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தான் வழங்கப்பட்டு இருந்தது. இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களில் ஆறு நாடுகளில் சுமார் 17,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

புகழந்து தள்ளிய டிரம்ப்: அப்போது அமெரிக்காவில் தான் கொரோனா வேகமாகப் பரவி வந்தது. அப்போது சிகிச்சைக்கு மருந்துகள் இல்லாத நிலையில், அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயினை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என்றார். முடக்கு வாதம் மற்றும் லூபஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என்றார். இதை மேஜிக் செய்யும் அதிசய மருந்து என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்ப் மட்டுமின்றி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூட அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது. சில ஆய்வாளர்கள் எல்லாவற்றையும் தாண்டி இதை கொரோனாவுக்கு எதிரான மேஜிக் புல்லட் என்று எல்லாம் சொன்னார்கள். ஆனால், உண்மையில் அதன் விளைவு நேர்மாறாகவே இருந்துள்ளது.

உயிரிழப்பு அபாயம் அதிகரிப்பு: அப்போதே சில மாதங்களில் கொரோனா சிகிச்சைக்கு இது பெரியளவில் பலன் தருவதில்லை என்றும் சொல்லப்போனால் உயிரிழப்பு அபாயங்கள் அதிகரிக்கவே செய்வதாகவும் ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இதுவே உறுதியாகியுள்ளது. கொரோனா காலத்தில் இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயினை எடுத்துக் கொண்டவர்களில் 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, துருக்கி, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் தான் 12739 பேர் இந்த மருந்தை எடுத்துக் கொண்டதால் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் தலா 1800+ பேரும், பெல்ஜியம் நாட்டில் 240 பேரும், பிரான்ஸ் நாட்டில் 199 பேரும் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 95 பேர் இந்த மருந்தை எடுத்துக் கொண்டு உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின். கொரோனா சிகிச்சைக்குச் சுத்தமாகப் பலன் அளிக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்த 17 ஆயிரம் உயிரிழப்புகள் என்பது ஆறு நாடுகளில் பதிவானது மட்டுமே, மற்ற நாடுகளையும் எடுத்துக் கொண்டால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாகவே இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+