வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மலேரியா மாத்திரை.. நாம கூட அனுப்பினோமே.. அதுதான் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின்.. இந்த மருந்தின் பெயர் நினைவு இருக்கிறதா. மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும், இதைத்தான் கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்த உதவும் என நம்பினார், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

Recommended Video

    ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தான் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாம்

    அமெரிக்காவுக்கு இதை இந்தியா தராவிட்டால், பதிலடி தரப்படும் என்று, இல்லாத மீசையை முறுக்கினார். இந்தியாவும், அமெரிக்கா மட்டுமல்ல மேலும் பல நாடுகளுக்கும் அவர்கள் கோரிக்கையை ஏற்று அனுப்பி வைத்தது.

    நம்ம நாட்டில் சிலரோ, மெடிக்கலுக்கு ஓடிச் சென்று, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை வாங்கி வைத்துக் கொண்டனர். சர்வதேச அளவில் திடீரென ஃபேமசான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையால்தான், அமெரிக்காவில் பலர் பலியாகிவிட்டனர் என்கிறது புதிய ஆய்வு.

    கொரோனா பாதிப்பு.. தமிழகம் முழுவதும் 385 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு கொரோனா பாதிப்பு.. தமிழகம் முழுவதும் 385 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

    ஆதாரம் இல்லை

    ஆதாரம் இல்லை

    நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினுக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது அந்த ஆய்வு முடிவு., ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு, அஜித்ரோமைசினுடன் அல்லது இல்லாமல், பலனை கொடுப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்கிறது அந்த கட்டுரை.

    இறப்பு விகிதம்

    இறப்பு விகிதம்

    "ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மட்டுமே கொடுத்து சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள் அதிக அளவு இறந்துள்ளனர்." என்று தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த அறிக்கைகள் குறித்து தனக்கு இதுவரை தெரியவில்லை என்றும், அதுபற்றி ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    30 மில்லியனுக்கும் அதிகமான அளவுகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா சேமித்து வைத்துள்ளது, அவற்றில் ஒரு பெரிய பகுதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். காங்கிரஸ் கட்சி பிரமுகர் பில் பாஸ்கிரெல் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையை குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆதாரம் தேவை

    ஆதாரம் தேவை

    "இன்று நாம் அனுபவிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமும், மருத்துவர்களும் நம் முன்னோர்கள் செய்த கடினமான ஆய்வு பணிகளின் பலன். இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம்தான். ஆனால், டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கப்படாத நிரூபிக்கப்பட்ட அதிசய சிகிச்சைகளை முன்வைப்பது இந்த பிரச்சினையிலிருந்து நம்மை வெளிக்கொண்டு வராது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின், சிகிச்சையை ட்ரம்ப் அடிக்கடி கூறுவது மிகவும் பொறுப்பற்றது. தேவையற்ற வேதனையையும் துன்பத்தையும் ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ளார்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    The plan to use hydroxychloroquine for treating the COVID-19 patients in the US has received a setback with more deaths being reported among those who were given the much-touted anti-malarial drug, according to a report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X