3ம் உலக போரை ஆரம்பிக்கும் ட்ரம்ப்? ரஷ்யா முதல் மெக்சிகோ வரை எதுவுமே தப்பாது போல! உச்சக்கட்ட பதற்றம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் எப்போது எதைச் செய்வார் என்றே தெரியாது. ஏற்கனவே அவர் பல உலக நாடுகள் குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறி வந்த நிலையில், இப்போது நேரடியாக ரஷ்யாவின் கப்பல் மீதே கை வைத்து இருக்கிறார். இப்படிச் சர்வதேச அளவில் அவர் பதற்றத்தை அதிகரித்து வரும் சூழலில், அது 3ம் உலகப் போராக வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே உலகில் தொடர்ச்சியாகப் பல முக்கியமான நாடுகளில் போர்கள் நடந்து வருகிறது. இருப்பினும், நல்வாய்ப்பாக இதுவரை அவை பெரிய உலகப் போராக மாறவில்லை. ஆனால், கடந்த 2, 3 நாட்களாக டிரம்ப் செய்வதைப் பார்த்தால் 3ம் உலகப் போர் வெடிக்கும் ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ரஷ்யக் கப்பல்
நோர்ட் கடலில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகவே ரஷ்யாவைச் சேர்ந்த 'மரினெரா' என்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா துரத்தி வந்தது. அந்தக் கப்பலை நேற்றைய தினம் அமெரிக்கப் படைகள் பறிமுதல் செய்துள்ளது. ரஷ்யா தனது கடற்படை படைகளை அனுப்பி இந்தக் கப்பலைப் பாதுகாக்க முயன்றதாகத் தகவல் வெளியா நிலையில், அதைத் தாண்டி அமெரிக்கப் படைகள் இந்தக் கப்பலைக் கைது செய்துள்ளது.
முதலில் 'பெல்லா 1' என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் மீது அமெரிக்கா 2024ல் பொருளாதாரத் தடையை விதித்தது. இதையடுத்து இந்த கப்பலின் பெயரை 'மரினெரா' என மாற்றி ரஷ்யா தொடர்ந்து இயக்கி வந்தது. மரினெரா கப்பல் ஈரானில் இருந்து வெனிசுலாவிற்குச் சென்று கொண்டிருந்தது. வெனிசுலா கடற்பரப்பில் அமெரிக்கப் படைகள் இருக்கும் தகவல் வந்ததைத் தொடர்ந்து மரினெரா கப்பல் தனது வழியை மாற்றி அட்லாண்டிக் பெருங்கடலுக்குத் திரும்பி கொண்டிருந்தது. அப்போது அதிரடியாக அதை அமெரிக்கக் கப்பல் கைப்பற்றியுள்ளது.
பெரிய சர்ச்சை
இதுவே இப்போது மிகப் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 1982 ஐ.நா. கடல் சட்டம் மாநாட்டின்படி, பிற நாடுகளின் அதிகார வரம்புகளில் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட கப்பல்களுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்த எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி ரஷ்யா கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இதுவரை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க உலகின் பல நாடுகள் மீது ராணுவ நடவடிக்கை என டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் கிரீன்லாந்தை வாங்கப் போகிறேன்.. அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு அது முக்கியம் என டிரம்ப் சொல்லி வருகிறார். கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கவோ அல்லது ராணுவ நடவடிக்கை எடுக்கவும் கூட அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஈரான்
அதேபோல ஈரான் மீதும் கூட அமெரிக்கா தாக்குதலை நடத்தலாம். ஈரானில் அதன் உச்சத் தலைவரே கமேனிக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும் நிலையில், அதில் வன்முறையும் வெடித்துள்ளது. ஈரானில் அமைதியாகப் போராடுவோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் ஈரான் மீது தாக்குதலை நடத்தவும் ரெடியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
3வது உலகப் போர்
சமீபத்தில் தான் வெனிசுலா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலை நடத்தி இருந்தது. அந்நாட்டின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் கைது செய்து நாடு கடத்தி இருந்தது. வெனிசுலாவை தாக்கிய போதே அடுத்துத் தேவைப்பட்டால் க்யூபா, கொலம்பியா, மெக்சிகோ நாடுகள் மீது அடுத்த தாக்குதல் நடத்தலாம் என்பது போலவும் கூறியிருந்தார்.
இப்படி உலகில் பார்க்கும் நாடுகள் மீது எல்லாம் ராணுவ நடவடிக்கை என டிரம்ப் மிரட்டி வருகிறார். இந்தச் சூழலில் நேரடியாக ரஷ்யா போர் கப்பல் மீதும் அமெரிக்கா கை வைத்துள்ளது. இப்படிச் சர்வதேச அளவில் அவர் பதற்றத்தை அதிகரித்து வரும் சூழலில், அது 3ம் உலகப் போராக வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications