முட்டி மோதும் நண்பர்கள்.. எலான் மஸ்க் மீது கடும் அதிருப்தியில் இருக்கேன்.. கோபத்தில் பேசிய டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக டிரம்ப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் டாஜ் பதவியில் இருந்து எலான் மஸ்க் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்புக்கு வலதுகரமாக இருந்தவர் எலான் மஸ்க். உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டிரம்பிற்காக பிரசாரத்தில் ஈடுபட்டது மட்டு இன்றி தேர்தல் நிதியாக பெருமளவு தொகையும் கொடுத்தார். டிரம்ப் வெற்றிக்கு முழு மூச்சாக பாடுபட்ட எலான் மஸ்கிற்கு தனது நிர்வாகத்தில் டிரம்ப் முக்கிய பொறுப்பை அளித்தார்.

deeply-disappointed-trump-reacts-as-feud-with-elon-musk-escalates

டிரம்ப் - எலான் மஸ்க் கருத்து வேறுபாடு

அமெரிக்க அரசாங்கத்தின் செலவின சீர்திருத்தங்களுக்காக உருவாக்கப்பட்ட DOGE என்ற குழுவின் ஆலோசகராக எலான் மஸ்க் செயல்பட்டார். அமெரிக்க அரசு நிர்வாகத்தில் தேவையற்ற செலவீனங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்த எலான் மஸ்க், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். மஸ்கின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டமும் வெடித்தது.

இத்தகைய சூழலில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பாக டாஜ் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். டிரம்புடன் நல்ல நட்புறவை கடைப்பிடித்து வந்த எலான் மஸ்கிற்கு தற்போது கருத்து வேறுபாடும் நிலவி வருகிறது. இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவை கடுமையாக விமர்சித்துள்ளார் எலான் மஸ்க்.

தலைகுனிய வேண்டும்

தான் வகித்து வந்த அரசாங்க செயல்திறன் துறை தலைவர் பதவியிலிருந்து விலகிய சில நாட்களிலேயே இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் எலான் மஸ்க் கூறுகையில், "என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த பெரிய, மோசமான, தேவையற்ற விஷயங்கள் நிறைந்த மசோதா. மிக மோசமானது. அருவருக்கத்தக்கது.

இதற்கு வாக்களித்தவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்" என்று கூறியிருந்தார். டிரம்பின் வரி செலவு மசோதாவை இப்படி விமர்சித்து இருந்தார் எலான் மஸ்க்.

மஸ்க் மீது நான் கடும் அதிருப்தி அடைந்தேன்

இந்த நிலையில்தான், எலான் மஸ்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் டொனால்டு டிரம்ப். அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறுகையில், "எலான் மஸ்க்குடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. இனிமேல் இருக்குமா என்று தெரியவில்லை. எலான் மீது நான் மிகவும் அதிருப்தி அடைந்தேன்" என்று கூறினார்.

டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் கடந்த ஒன்பது மாதங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக எலான் மஸ்க் வெளிப்படையாக தனது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

இதில் தான் பிரச்சினை உருவானது

டிரம்ப் மேலும் கூறுகையில், "இந்த மசோதாவின் உள் விஷயங்களை எலான் நன்கு அறிந்திருந்தார். இங்கு இருப்பவர்களை விட அவருக்கு எல்லாமே தெரியும். அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் மின்சார வாகனம் கட்டாயம் என்பதை குறைக்கப் போகிறோம் என்பதை அறிந்த பிறகுதான் பிரச்சனை உருவானது. ஏனென்றால் அது பில்லியன் கணக்கான டாலர்கள். எனவே, அதை நான் புரிந்துகொள்கிறேன்" என்றார்.

டிரம்ப் மேலும் கூறுகையில், இந்த மசோதாவின் ஒவ்வொரு அம்சத்தையும் எலான் மஸ்க்கிற்கு நன்றாக் தெரியும்.. அவரை விட யாருக்கும் அதிகம் தெரியாது. எலான் மஸ்க் என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் தவறாகச் சொல்லவில்லை. ஆனால் அது அடுத்ததாக நடக்கும் என்று நான் நம்புகிறேன். எலான் மீது நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன். நான் எலானுக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+