"751 கோடி.." அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடாது! பைடனை மிரட்டும் தொழிலதிபர்கள்! என்ன மேட்டர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பைடன் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக நிதி கொடுப்போர் பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் நிதி தர மாட்டோம் என செக் வைக்க ஆரம்பித்துள்ளனர். இப்படியே சுமார் 90 மில்லியன் டாலர், அதாவது 751 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதனால் அவர்கள் மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அப்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது தான் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதிருப்தி: இது ஒரு பக்கம் இருக்கக் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் கடும் போட்டி இருக்கும் என்றே கூறுகிறது. குறிப்பாக பைடன் மீதான அதிருப்தி சற்று அதிகமாகவே இருக்கிறது. 81 வயதாகும் பைடன் அமெரிக்காவை வழிநடத்தும் அளவுக்கு ஃபிட்டாக இல்லை என்பதே பலரது விமர்சனமாக இருக்கிறது. அதிலும் கடந்த மாதம் டிரம்ப்- பைடன் இடையே நடந்த விவாதம் பைடன் இமேஜை முற்றிலுமாக காலி செய்துவிட்டது.
கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிர்வாகம் செய்த நடவடிக்கைகளை முன்வைக்க பைடன் தவறிவிட்டார். பைடன் அந்த விவாதத்தில் திக்கித் திணற.. டிரம்ப் எகிறி அடித்தார். இந்த விவாதத்தில் முழுக்க முழுக்க டிரம்ப் தான் ஆதிக்கம் செலுத்தினார். இந்த விவாதத்திற்குப் பின்னரே பைடன் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தனர். சொந்த கட்சியினரே பைடன் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர்.
அதிகரிக்கும் எதிர்ப்பு: பைடன் இதுவரை மிகச் சிறந்த அதிபராகச் செயல்பட்டுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால், அவர் இந்த முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் வெல்வது கடினம் என்பதே ஜனநாயக கட்சியினரின் கருத்தாக இருக்கிறது. டிரம்ப் மீண்டும் அதிபரானார் அது அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தரும் எனச் சொல்லும் அவர்கள், அதிபர் தேர்தலில் கடும் போட்டி தர வேண்டும் என்றால் பைடன் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்றே பலரும் வலியுறுத்துகிறார்கள்.
பைடனுக்கு பதிலாக தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர். கருத்துக்கணிப்புகளிலும் கூட கமலா ஹாரிஸ் களமிறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே பைடனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகவில்லை என்றால் நிதி தர மாட்டோம் என்று ஜனநாயக கட்சி ஆதரவு தொழிலதிபர்கள் செக் வைக்கவும் தொடங்கியுள்ளனர்.
தொழிலதிபர்கள்: அமெரிக்காவைப் பொறுத்தவரைப் பிரச்சாரம் செய்ய மிக அதிகமாகச் செலவாகும். இதனால் அனைத்து தலைவர்களும் நிதி திரட்டியே பிரச்சாரம் செய்வார்கள். டிரம்ப் உள்ளிட்ட சில தொழிலதிபர்கள் மட்டும் விதிவிலக்கு. இருப்பினும், பெரும்பாலான வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய நன்கொடை முக்கியம். பைடனும் நன்கொடையையே சார்ந்து இருக்கிறார். ஆனால், இப்போது அவர் அதிபர் தேர்தலில் விலக வேண்டும் என்று கூறி நிதியை முடக்கியுள்ளனர்.
முடக்கம்: முதற்கட்டமாக சுமார் 90 மில்லியன் டாலர், அதாவது 751 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பைடனுக்கு பதிலாக வேறு யாராவது போட்டியிட்டால் மட்டுமே நிதி தருவோம் என அவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். பைடன் விலகவில்லை என்றால் முழுமையாக நிதியை முடக்குவோம் என்று அவர்கள் செக் வைத்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications