ஏமாற்றம்.. ஆனால்.. இந்தியாவின் செயல் ஆச்சரியப்பட வைக்கல! உக்ரைன் போர் பற்றி அமெரிக்கா பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு என்பது தங்களுக்கு ஏமாற்றம் தந்தாலும், அது பெரியளவில் ஆச்சரியம் தரவில்லை என அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இந்தோ - பசிபிக் இயக்குநர் மிரா ராப் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் அன்வான்ஸ்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்தாய்வில் பங்கேற்று பேசிய அவர், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை தொடர இந்தியாவுக்கு மாற்று வழிகள் தேவைப்பட்டதாக கூறி உள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பின்போது இந்தியா தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்தது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதேநேரம் அது எங்களுக்கு பெரிய ஆச்சரியம் அளிக்கவில்லை." என்றார்.

டபுள் கேம் ஆடும் இந்தியா

டபுள் கேம் ஆடும் இந்தியா

அண்மை காலங்களாக அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவை கொண்டிருக்கிறது. குவாட் நாடுகள் கூட்டமைப்பில் சீனாவுக்கு எதிராக செயல்படுவதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. அதே நேரம் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்ட கால நட்புறவு இருக்கிறது. அதன் காரணமாகவே இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையில் ஆயுதம் வழங்கும் நாடாக ரஷ்யா இருக்கிறது.

பாதுகாப்புக்காக ரஷ்யாவுடன் இந்தியா உறவு

பாதுகாப்புக்காக ரஷ்யாவுடன் இந்தியா உறவு

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டிக்க இந்தியா தவறிவிட்டது. இதுகுறித்து பேசியுள்ள ராப் ஹூப்பர், "சீனா உடனான இந்தியாவின் உறவு மோசமடைந்து இருப்பதால் தனது பாதுகாப்பு கருதி ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது.

இந்தியாவை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்

இந்தியாவை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்

அதேபோல் ரஷ்யாவின் ஆயுதங்களை தொடர்ந்து நாடி இருக்க வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவை நமக்கு நெருக்கமாக வைத்திருப்பது குறித்தும் அதன் விருப்பங்களை எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றியும், அதன் சுயாட்சியை எப்படி தொடரச் செய்வது என்பது குறித்தும் அதிகம் நான் சிந்தித்து வருகிறேன். " என்றார்.

இந்தியாவின் செயலால் அமெரிக்கா அதிருப்தி

இந்தியாவின் செயலால் அமெரிக்கா அதிருப்தி

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முன்பாகக்கூட ரஷ்யாவிடம் இந்தியா எஸ்-400 ஏவுகணை கவசத்தை வாங்கியது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் சட்டம் அமெரிக்காவில் 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

Recommended Video

    UN Assembly-யில் Russia-வின் தீர்மானத்தை புறக்கணித்த உலகநாடுகள் | Oneindia Tamil
    இந்தியா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    இந்தியா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    ஆனால், இந்தியா மீது அதுபோன்ற பொருளாதார தடையை விதித்தால், குவாட் நாடுகள் கூட்டமைப்பில் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் ஒத்துழைப்பை இழந்துவிடுவோமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறது. இதுகுறித்து ராப் ஹூப்பர் தெரிவிக்கையில், "நமது நட்பு நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்காமல் தடுக்க அவற்றுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி உதவி செய்ய வேண்டும்." எனக்கூறி இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+