துண்டு துண்டா போன கால்.. தொங்கிய தலை.. உருகிய ஆபிரகாம் லிங்கனின் சிலை.. அமெரிக்காவில் இப்படியா? ஏன்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெயில் கொடுமை அதிகரித்துள்ளது.. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் கலக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அத்துடன் ஆபிரகாம் லிங்கன் சிலை குறித்த வருத்தமும் அம்மக்களிடம் சூழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் 16-வது அதிபர் ஆபிரகாம் லிங்கன்.. அடிமை முறைக்கு வலுவான கண்டனத்தை முழக்கியவர்.. அந்த அடிமை முறையை எதிர்த்து, அதனை ஒழிக்கவும் முனைந்தவர்.

America Abraham lincoln Heat

ஆபிரகாம் லிங்கன்: இறுதியில், 1860-ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த லிங்கன், குடியரசு கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் அதிபராகவும் வெற்றி பெற்றார்...

அந்தவகையில், ஆபிரகாம் லிங்கனை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் கேரிசன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரின் விளைவுகளை குறிக்கும்விதமாக சாண்டி வில்லியம்ஸ் IV-ன் கலைநயத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டதாகும்.

மெழுகு சிலை: 6 அடி உயரத்தில், ஆபிரகாம் லிங்கன் ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில் இந்த மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த பெருமைக்குரிய மெழுகு சிலைதான் தற்போது வெயில் தாங்காமல் உருகி ஓடி கொண்டிருக்கிறது..

அமெரிக்காவில் தற்போது வெப்ப அலை வீசிவருகிறது.. அந்தவகையில், கடந்த சனிக்கிழமையன்று வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்துவிட்டது. இந்த அளவுக்கு வெப்பம் எப்போதுமே அமெரிக்காவில் இருந்ததில்லையாம்.. வழக்கத்திற்கு மாறான வெப்பம் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.. 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரித்துவிட்டதால், இந்த மெழுகு சிலை உருக துவங்கியது..

தலை, கால்கள்: இந்த வெப்பத்தால், லிங்கனின் தலை மற்றும் வலது கால் உருகி வழிந்தது.. பிறகு, அந்த மெழுகு கால்கள், உடலிலிருந்து பிரிந்தது. தலை துண்டாக தனியே வந்துவிட்டது. தலையில் வெயில் , சுட்டெரித்து, படிப்படியாக கால்கள் வரை வெப்பம் பரவி உருகியது.. லிங்கன் உட்கார்ந்த நிலையிலிருக்கும் அந்த நாற்காலியும் உருகிவிட்டது. இது அத்தனையும் வீடியோவாகவும், போட்டோவாகவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

லிங்கனின் தலை தனியாக வந்துவிட்டதால் அதனை சரிசெய்யும் வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.. அதனால், தலையில்லாமல் ஒரு கம்பி மட்டும் மெழுகுச்சிலையில் ஒட்டிக்கொண்டிருக்கிறதாம்.

பெரும் கவலை: நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெட்பம் அதிகரித்தபடியே காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அந்தவகையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் பகுதியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருவது அந்நாட்டுமக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.. லிங்கனின் தலை தொங்கிவிட்டதால், அது எப்போது சீராகும் என்றும் காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+