சுந்தரா டிராவல்ஸ் வடிவேலு நிலைமையை விட மோசம்! பாஸ்போர்ட்டை கடித்து துப்பிய நாய்..புதுமாப்பிள்ளை ஷாக்
வாஷிங்டன்: நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் எலி ஒன்று பாஸ்போர்ட்டை கிழித்ததாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சி போல அமெரிக்காவில் புது மாப்பிள்ளை ஒருவரின் பாஸ்போர்ட்டை நாய் கடித்துள்ளது. இதனால் தனது திருமணத்துக்கு செல்ல முடியாத நிலையில் மாப்பிள்ளை உள்ளார்.
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவின் வெளிநாட்டு கனவை ஒரு பாஸ்போர்டை கடித்து குதறிய ஒரு எலி நாசம் செய்து விட்டது எனக் கூறி, படம் முழுக்க எலியை காணும் போதெல்லாம் டென்ஷன் ஆகி அடிக்க துரத்துவார். அந்த எலியும் நைசா டேக்கா கொடுத்து விட்டு தப்பி ஓடிவிடும். படம் முழுக்க மிகவும் ரசனையாக இந்த காமெடி காட்சி அமைந்து இருக்கும். இதைப்போலவே அமெரிக்காவில் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. அது குறித்த விவரத்தை பார்க்கலாம்.

அமெரிக்காவில் வசித்து வரும் பிராட்டோரோலி மற்றும் மகடா மசாரி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தமும் முடிந்த நிலையில், திருமணம் தங்கள் சொந்த நாடான இத்தாலியில் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக தடல் புடலான ஏற்பாடுகளை இருவரும் செய்து வந்தனர். சொந்த நாட்டுக்கு சென்று அங்கு திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது.
சில நாட்களே திருமணத்திற்கு பாக்கியிருந்தது. திருமணத்திற்கு தேவையான சில ஆவணங்களை எடுக்கவும் அருகில் உள்ள இடத்திற்கு பிரட்டோரலி தனது வருங்கால மனைவியுடன் புறப்பட்டு சென்றார். வீட்டில் அவர் வளர்த்து வந்த சிக்கி என்று பெயர் வைக்கப்பட்ட செல்ல நாய் மட்டும் இருந்தது. கோல்டன் ரீட்ரைவர் வகையை சேர்ந்த இந்த நாய், தனது ஓனர் வீட்டை விட்டு வெளியே போன சில நிமிடங்களில் வீட்டிற்குள் புகுந்து அங்கு கிடந்த பாஸ்போர்ட்டை கடித்து துப்பியது.
பாஸ்போர்ட்டின் பல பக்கங்களை கடித்து குதறி விட்டது. தனது ஃபியான்சியுடன் வெளியே போயிவிட்டு ஜாலியாக வந்த பிரட்டரோலி, காகிதங்களாக கிழிந்து கிடக்கிறது என பார்த்து விட்டு அதை ஒடிப்போய் எடுத்தார். அதைப் பார்த்த அடுத்த நொடியே இடியே விழுந்தது போல் ஆகிவிட்டது. ஏனெனில் திருமணத்திற்காக வரும் 31 ஆம் தேதி அமெரிக்கா செல்ல பிரட்டோரலி திட்டமிட்டு இருந்தார்.

தற்போது நாய் கடித்து குதறியதால் அவரால் இத்தாலி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இத்தாலி போகாவிட்டால் திருமணம் எப்படி செய்து கொள்வது.. என நாயை பார்த்து பல்லை கடித்தபடியே, அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று தனது நிலையை கூறினார். அங்குள்ள அதிகாரிகளும் வெளியுறவுத்துறை மூலமாக புதிய பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்களாம்.
இதனால், சற்றே ஆறுதல் அடைந்த பிரட்டரோலி, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பாஸ்போர்ட் வந்துவிட்டால் நானும் தனது வருங்கால மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இத்தாலி போய்விடுவேன். இல்லையென்றால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்பும் போது பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.. என மனம் நொந்தபடியே தனது சிக்கியை பார்த்துக் கொண்டு கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications