Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூண்டிவிட்டாலும் டிரம்பிடம் கோபப்படாதீர்.. வார்னிங் வந்தும் கேட்காத ஜெலன்ஸ்கி! மோதலின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ‛‛டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பின்போது என்ன நடந்தாலும் கோபப்படாதீர்கள். மீடியா அல்லது யாரோ ஒருவர் டிரம்புடன் வாக்குவாதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் அதனை அனுமதிக்காதீர்கள்'' என்று முன்கூட்டியே வார்னிங் கிடைத்தும் கூட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி டென்ஷனாகி கோட்டை விட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வார்னிங்கை முன்கூட்டியே விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொடுத்தது யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

கடந்த 3 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர முயன்றது தான் போருக்கு காரணம். இப்போது போரை நிறுத்த அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அவர் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதேபோல் ரஷ்யா, அமெரிக்கா பிரதிநிதிகள் சந்தித்து பேசி உள்ளனர்.

donald trump volodymyr zelensky america

இதையடுத்து தான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகை சென்றார். இருவரும் சந்தித்து பேசினர். அதுமட்டுமின்றி அமெரிக்கா 350 பில்லியன் அமெரிக்க டாலரை உக்ரைனுக்கு உதவியாக வழங்கி உள்ளது.

இதற்கு கைமாறாக உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்களில் 50 சதவீதத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வகையில் இந்த சந்திப்பு என்பது நடந்தது. ஆனால் இந்த சந்திப்பு என்பது வெற்றி பெறவில்லை. அதோடு அமெரிக்கா - உக்ரைன் இடையேயான பந்தம் தான் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது. அதாவது வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமெரிக்க துணை அதிபர் ஜேடிவான்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே கடும் வாக்குவாதம் என்பது ஏற்பட்டது.

வெள்ளை மாளிகை வரலாற்றில் இல்லாத வகையில் இருதரப்பினரும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்தனர். ஒரு கட்டத்தில் கோபமான டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவினரை அங்கிருந்து வெளியேற்றினார். அவமானப்பட்ட நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினர். இது மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்புக்கு முன்பாகவே உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிற்கு வார்னிங் செய்யப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்பை எதிர்த்து பேசாதீர்கள் என்று

ஜெலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்னிங்கை செய்தவர் டொனால்ட் டிரம்பின் ஜனநாயக கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தான். இவர் தெற்கு கரோலினாவை சேர்ந்தவர். தற்போது அமெரிக்காவின் செனட் சபையில் உறுப்பினராக உள்ளார்.

இதுபற்றி லிண்ட்சே கிரஹாம் கூறுகையில், ‛‛ஓவல் அலுவலக சந்திப்புக்கு ஒருமணிநேரத்துக்கு முன்பாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அந்த நாட்டின் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த செனட்டர்களை சந்தித்து பேசினார். இந்த வேளையில் ஜனநாயக கட்சியின் செனட்டரும், டொனால்ட் டிரம்புக்கு நன்கு அறிமுகமானவருமான லிண்ட்சே கிரஹாம், விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

இதுபற்றி லிண்ட்சே கிரஹாம் கூறியுள்ளதாவது: வெள்ளை மாளிகையின் ஓவல் மாளிகையில் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் (ஜெலன்ஸ்கி - டிரம்ப் வாக்குவாதம்) நடந்தது. இதற்கு ஒருமணிநேரத்துக்கு முன்பாக தான் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். சந்திப்பின்போது என்ன நடந்தாலும் கோபப்படாதீர்கள். மீடியா அல்லது யாரோ ஒருவர் மூலம் டிரம்புடன் வாக்குவாதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் அதனை அனுமதிக்காதீர்கள். ஏனென்றால் இந்த சந்திப்பு என்பது இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பானது என்று கூறியிருந்தேன்.

ஆனால் நான் ஓவல் அலுவலகத்தில் பார்த்தது மிகவும் மரியாதைக்குறைவானது. இனியும் அமெரிக்க உக்ரைனுடன் சேர்ந்து செயல்படுமா? என்பது எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரை பெரும்பாலான அமெரிக்கர்கள் உக்ரைனுடன் சேர்ந்து செயல்பட கூடாது என்று தான் நினைப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் டிரம்புடனான மீட்டிங்கை அவர் கையாண்டது தான்'' என்று கூறியுள்ளார்.இதன்மூலம் டொனால்ட் டிரம்பிடம் கோபப்படாதீர்கள் என்று முன்பே ஜெலன்ஸ்கிக்கு வார்னிங் செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. ஆனாலும் ஜெலன்ஸ்கி அதனை காதில் வாங்கி கொள்ளாமல் வாயை கொடுத்து வாங்கி கட்டி உள்ளார்.

முன்னதாக நேற்று வெள்ளை மாளிகையில் தொடக்கத்தில் எல்லாம் சரியாக தான் சென்றது. பத்திரிகையாளர் சந்திப்பின்போது டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகியோர் பதிலளித்து கொண்டே வந்தனர். அப்போது தான் திடீரென்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலையீடு செய்தார்.

இதுதான் பிரச்சனைக்கு முதல் புள்ளியாகும். ஜேடி வான்ஸ், ‛‛அமெரிக்க ராஜாங்க ரீதியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. போர் நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் பேசி உள்ளது. ஆனால் உங்களின் செயல்பாடு உக்ரைனை அழிவுப்பாதைக்கு எடுத்து செல்லும் வகையில் உள்ளது'' என்று கூறினார். இதை கேட்டவுடன் ஜெலன்ஸ்கி கோபமானார். உடனே ஜெலன்ஸ்கி, ‛‛ரஷ்யா செய்வதை நீங்கள் தடுக்கவே இல்லை. 2014ல் ரஷ்யா எங்களின் நிலத்தை ஆக்கிரமித்தது. அப்போது இருந்த பராக் ஒபாமா, அதன்பிறகு டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் எதையும் செய்யவில்லை. அப்படியான சூழலில் எதை சொல்கிறீர்கள்'' என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட டிரம்ப், ‛‛நான் அதிபராக இருக்கும் வரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்ததா? இதற்கு முன்பு இருந்தவர் முட்டாள். அவர் சரியாக கையாளவில்லை'' என்று கூறினார். அதற்கு ஜெலன்ஸ்கி, ‛‛அவரும் உங்களின் அதிபர் தானே. அமெரிக்காவை சேர்ந்தவர் தானே'' என்று கூறினார். இதை கேட்ட துணை அதிபர் ஜேடி வான்ஸ், ‛‛மிஸ்டர் பிரசிடென்ட், அமெரிக்காவை பத்திரிகையாளர் முன்பு அவமானப்படுத்துகிறார். கொஞ்சமாவது நன்றி உணர்வுடன் இருங்கள்'' என்று கூறினார்.

இதையடுத்து டிரம்ப் குறுக்கிட்டு, ‛‛உக்ரைன் இப்போது நல்ல நிலையில் இல்லை. மோசமான சூழலில் நீங்கள் இருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் தான் காரணம். பலகோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றார். இதற்கு பதில் கூறிய ஜெலன்ஸ்கி, ‛‛இப்படி சத்தமாக மீடியா முன்பு போர் பற்றி பேசுவது சரியா? என்று யோசித்து பார்க்க வேண்டும். போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்" என்றார்.

இதற்கு டிரம்ப், "நீங்கள் தனியாக இல்லை.. அமெரிக்க உங்களுக்கு உதவியிருக்கிறது. தனியாக இருந்தால் 3 நாள் கூட போரை சமாளித்து இருக்க மாட்டீர்கள். இப்போது உக்ரைன் என்ற நாடே இருந்திருக்காது. உங்களுக்கு 350 பில்லியன் டாலர் எங்கள் முன்னாள் அதிபர் தந்திருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம். நாங்கள் இருப்பதால் தான் உங்கள் நாடு இருக்கிறது. 3ஆம் உலகப்போரை வைத்து விளையாட வேண்டாம். சமரசம் பேச நினைத்தால் மட்டும் அடுத்த முறை இங்கு வாருங்கள்'' என்று கூறி வெளியே போகும்படி கூறினார். இதையடுத்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+